பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 52

தது. மயூர பவனம்’ என அந்தக் கோவிலுக்குப் பெயர் வைத்தார்.” - - - - அபயானந்தர்

காந்தமலை அடிவாரத்தில் ஒரு மடம் உண்டு. அங்கே அப்போது அபயானந்தர் என்கிற துறவி இருந்தார்: பூர்வாசிரமத்தில் அவருக்குத் தியாகராஜ பிள்ளை என்று பெயர்: முதலில் வெள்ளை வேட்டியுடன் இருந்தார்.

பின்னர்க் காவி உடுக்கலானார்,

அவரது சொந்த ஊர் பூரீரங்கம், அங்கே வியாபாரம் செய்து வந்தார். ஒரு முறை சேந்தமங்கலம் அவதூத சுவாமிகள் பூரீரங்கம் போயிருந்தபோது தியாகராஜ பிள்ளை அவரிடம் உபதேசம் பெற்றார். சுவாமிகளின் ஆக்ஞைப்படி சில காலம் காந்த மலை அடிவாரத்தில் தங்கிக்கொண்டு சேந்தமங்கலம் சுவாமிகளைப் போய் அடிக்கடி பார்த்து வந்தார். -

தியாகராஜ பிள்ளையின் வைராக்கிய உணர்ச்சியை உணர்ந்து சேந்தமங்கலம் சுவாமிகள் அவருக்குத் துறவு கொடுத்து அபயானந்தர் என்னும் பெயரும் சூட்டினார்.

ஒவ்வொரு நாளும் மாலையில் இவர் மயூர பவனம்” போய் விநாயகரையும், முருகனையும் வழிபட்டுவிட்டுக் காந்தமலைக்குப் போவார். அங்கே அபயானந்தரையும் பார்த்து அவருடன் சிறிது நேரமாவது அளவளாவி வருவார். இவர் ஒரு நாள் போகவில்லை என்றால், இவரைத் தேடிக்கொண்டு அவரே இவரது வீட்டிற்கு வந்துவிடுவார்.

இன்னாததையும் இனியதாக்கல்

இவர் பிற்காலத்தில் பிர ப ல எழுத்தாளரும், ಹಣ6ು 056ir” பத்திரிகை ஆசிரியருமாக இருந்தபோது...

- *இவருடைய சகோதரி மதுகரம்மாள் சொன்னது.