பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等品 நாம் அறிந்த கி. வா. ஜ.

ஆண்டுதோறும் தீபாவளி அன்று இவரது வீட்டுக் கூ ட த் தி ல் ரத்தினக் கம்பளம் விரித்திருக்கும். ‘கல்கி, . “கலைமகள்’, ‘விகடன்’, ‘அமுதசுரபி’ எனப் பல பத்திரிகைகளின் தீபாவளி மலர்கள் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடக்கும். அவற்றின் மத்தியில் இவர் உட்கார்ந் திருப்பார். . . . > - - -

இவரது ஆசியைப் பெறப் பல எழுத்தாளர்கள். அன்பர்கள் தனித்தனியாகவும் சேர்ந்தும் இவரது வீட்டிற்கு வருவார்கள். எல்லோருக்கும் இவர் சந்தனம், சர்க்கரை. பழம்,தாம்பூலம் கொடுத்து ஆசிவ்ழங்குவார்,

உள்ளேயிருந்து தீபாவளித்தின் பண்டங்களை, வரு. வேர்ாகெல்லாம் இவருடைய துணைவியாரே எடுத்து, வந்து வழங்குவார். -

வருபவர்கள் அவற்றைச் சுவைத்துக்கொண்டே, தீபாவளி மலர்களையும் புர்ட்டிப் பார்ப்பார்கள். ஒரு. சமயம் ஒருவர், பத்திரிகையில் இவர் எழுதியிருந்த, ‘துணுக்கு ஒன்றைப் பாராட்டினார். -

என்ன சார், நான் ஒரு பொறுக்கி. என்னைப் போய்ப் பாராட்டுகிறீரே என்றார் இவர். எல்லோர் முகமும் ஏதோ போல் ஆகிவிட்டன: -

‘ஏன், அப்படிப் பார்க்கிறீர்கள்? என்ன தவறாகச் சொன்னேன்? பத்திரிகைத் துறையில் இரு ந் தால். உங்களுக்கும் தெரியும்: ஒரு கதை, கட்டுரையை அச்சிடும்போது அது ஒரு பக்கத்தின் பாதியோடு, முக்காலோடு முடிந்துவிடுகிறது. பாக்கி இடத்தை நிரப்ப, அவர் சொன்னது. இவர் சொன்னது என எங்கெங்கோ இருந்து பொறுக்கிப் பொறுக்கித்தானே நாங்கள் போடுகிறோம்? நாங்கள் பொறுக்கிகள்தாமே!’ எனச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தார்கள்.

- இதுபோலப் பேசும் பழக்கம் இவரிடம் இவர்த இளமைமுதலே இருந்திருக்கிறது. - -