பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 54.”

இவர் எங்காவது போய்விட்டு, அன்று அபயானந்த ரைப் பார் க் கா மல் வீட்டிற்கு வந்தால், ‘அபயானந்தர் வீட்டிற்கு வந்தாரா?’ என்று கேட்க மாட்டார். -

தம் வீட்டிற்குள் நுழையும்போதே, ஏம்மா,

கட்டேலே போறவர் வந்தாரா?’ எனக் கேட்டுக் கொண்டே வருவாராம், ‘சுவாமிகளை அ ப்ப டி ச்

சொல்லாதே!’ என இவருடைய தாயார் இவரைக் கடிந்துகொள்வார். - . -

நான் இப்போது தப்பாக என்ன சொன்னேன்? வெளியில் போகும்போது அவர் பாதரட்சைக்கட்டை அணிந்து போவதால் கட்டேலே பேர்றவர் என்று. சொன்னேன்’ என்பாராம் இவர், -

அதைக் கேட்டு இவருடைய சகோதரி மார் சிரிப்பார்

களாம்.”

அவதுத் சுவாமிகள் -

பூர் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி என்பது சேந்தமங்கலத்தில் அப்போது இருந்த அவதூத சுவாமி களின் பெயர் பலவித அற்புத லீலைகளைச் செய்த வண்ணம் சேந்தமங்கலத்திலுள்ள ஒரு சிறு குன்றில் அவர் தங்கி வாழ்ந்தார். -

அவருடைய குருநாதர் ரீசதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுக்கோட்டையில் ஜட்ஜாக இருந்து பிறகு துறவு பூண்டார்; அதனால் அவரை ஜட்ஜ் சுவாமிகள்’ என்றும் சொல்வார்கள்; அவருடைய, அதிஷ்டானம் புதுக்கோட்டையில் இருக்கிறது. -

பூர் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி களுக்குத் தம் சிறு வயதுமுதல் பணிவிடை செய்து, வந்தவர் சங்கரானந்தர்: சுவாமிகள் திடீரென்று

  • சகோதரி மதுகரம்மாள் சொன்னது, o