பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 56.” அங்கே உனக்கு என்ன வேலை?’ எனத் தந்தை, முகட்டார். அங்கே சுவாமிகள் இருக்கிறார்கன். அவர்களிடம் போய்ச் சில காலம் கைங்கர்யம் பண்ணி நல்ல பல நூல்களை வாசித்துவிட்டு வருகிறேன்’ என இவர் சொன்னார். . - -

இவருடைய தாயாரு க் கு உள்ளுக்குள் திகில் ஏற்பட்டது. எங்கே இவன் சந்நியாசி யாகிவிடுவானோ: என இவர் இருக்கும் கோலம் கண்டு பயந்தார்.

அதனால், எங்கும் போக வேண்டாம்’ எனத் தாய் தந்தையர் இவரைத் தடுத்துவிட்டார்கள்:

. அப்போதைக்கு இவர் சமாதானம் அடைந்தார். தாய்தந்தையரின் வார்த்தையை மீறவும் துணிவு. ஏற்படவில்லை. என்றாலும், சேந்தமங்கலம் போக, வேண்டுமென்ற ஆர்வம் கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டு வந்தது. உயிரிலே தோற்றிய பசியாகிவிட்ட அந்த ஆசை வேறு எதனாலும் திராது போல் இருந்தது. - ஒரு நாள் சேந்தமங்கலம் போகலாமா வேண்டாமா என்பதற்குத் “திருவாசகத்தில் கயிறு சார் த் தி ப் பார்த்தார். ‘போவோம். காலம் வந்தது காண், புயங்கப் பெருமான் கழல் புகவே’ என்ற பகுதி வந்தது: கடவுளே சேந்தமங்கலம் போக உத்தரவு கொடுத்து விட்டதைப்போல் இவர் மனம் மகிழ்ந்தார்டு , o

அன்று இரவு கதர் வேட்டி ஒன்றையும், துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு விதித் திண்ணையில் வந்து வழக்கம்போலப் படுத்துவிட்டார் யாரும் கவனிக்க வில்லை, - . ... . . . . .” : விடியற்காலம் மற்றவர்கள் எழுந்திருப்பதற்கு முன் எழுந்து, சேந்தமங்கலம் நோக்கித் தம் யாத்திரையைத்

தொடங்கினார் ‘. . . . . . . . -

மோகனூரிலிருந்து சேந்தமங்கலம் 20 மைல் தாரம் > க்கும். அவ்வூருக்கு நாமக்கல் வழியாகத்தான் செல்ல