பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so தாம் அறிந்த கி. வா. ஜ:

வேண்டும். நாமக்கல் இவரது ஊரிலிருந்து 12 மைல்கள்

இருக்கும். -

மோகனூரிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய இவர், நாமக்கல் சென்று அங்கிருந்து சேந்தமங்கலம் நோக்கி நடந்தார். ஆனால் த ட ந் த ேத தெரியவில்லை. உடம்போடே சென்றார்; ஆனால் உடம்பு இருப்பதே தெரியவில்லை. கால் வலி, பசி, தாகம் எதையும் உணர வில்லை. நடுவில் எங்கும் தங்கவில்லை. சேந்தமங்கலம் அடைந்தபோது பிற்பகல் ஒன்றாகிவிட்டது. அங்கே சின்னஞ்சிறு குன்று ஒன்றில் சுவாமிகள் இருந்தார், அவர் இருக்குமிடம் தேடிச் சென்று, அவருடைய காவில் சாஷ்டாங்கமாக விழுந்து தமஸ்கரித்தார். தாரை தாரையாகக் கண்ணிர் வழியப் பேசமுடியாது விம்மினார். சுவாமிகள் புன்முறுவலுடன் இவரை ஆசீர்வதித்து இவரது குடும்பத்தைப்பற்றியெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக விசாரித்துத் தெரிந்துகொண்டார். - “சுவாமிகள் அடியேனைச் சீடனாக ஏற்றுக்கொண்டு. சந்நியாசம் வழங்க வே ண் டும் ‘ என இவர் . விண்ணப்பித்துக்கொண்டார், -- -

‘ குழந்தாய், உன் தாய் தந்தையரின் அநுமதியின்றி நான் ஒன்றும் செய்ய முடியாது. இப்போதைக்கு நீ ஒருவன்தானே அவர்களுக்குப் பிள்ளை! இது ஏகபுத்ர விஷயம். உனக்கு என்னால் து ற வு அ வரி ப் ப த ற் கில்லை’ என்று சொன்னார். - -

அப்போது இவருக்குத் தம்பி பிறந்திருக்கவில்லை; இவருடைய இருபதாவது பிராயத்தில்தான் தம்பி,கி.வா. பாலசுப்பிரமணியன் பிறந்தார். • . . .

“சுவாமி, எனக்குச் சந்நியாசம் தராவிட்டாலும் தங்களிடம் இருந்துகொண்டு தங்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தையாவது தந்தருள வேண்டும்’ என மன்றாடிக் கெஞ்சினார்: - -

நா-4