பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ9 நாம் அறிந்த கி.வா.ஜ.

பளபளவென இவருடைய பாதங்கள் ரத்தம் கட்டிச் சிவந்திருந்தன. கைலாசத்தின் பெரிய சகோதரி வேதம், இவருடைய காலுக்கு விளக்கெண்ணெய் தடவி வெந்நீர் விட்டு நீவினார். கையில் பணம் கொடுத்து, ‘மோக னுாருக்கு வண்டியில் போ! நடந்து போகாதே’ எனச் சொல்லி அனுப்பினார். நண்பர் கைலாசம் இவருடன் நாமக்கல் வந்து, இவரை வண்டியேற்றி, மோகனுாருக்கு அனுப்பி வைத்தார். காந்தமலை முருகனிடம் காதல்

பூரீமத் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகளைத் தரிசித்து வந்ததுமுதல் முருகனைத் தீவிரமாக இவர் உபாசனை செய்யத் தொடங்கினார். ஆன்மிக வளர்ச்சியில் இவரது மனம் நாட் டம் கொண்டது. -

மோகனுார்க் காவேரிக் கரையில் இருக்கும் சிவாலயத் தில் முருகனின் சந்நிதானத்திற்கு எதிரில் ஒரிடம் உண்டு. காலையிலும், மாலையிலும் நீராடிவிட்டு இவர் அங்கே உட்கார்ந்து ஜபம் செய்வார். காயத்திரி மந்திரத்தை மட்டும் இருபத்துநான்கு லட்சம் ஜபித்திருப்பார். ஜபம் செய்யும்போது இவருடைய விழிகளிலிருந்து கண்ணிர் வந்துகொண்டே இருக்கும். சில நேரம் விசித்து விசித்து அழுவார்; சில நேரம் சிரித்துக்கொண்டே இருப்பார். நேரம் போவதே இவருக்குத் தெரியாது.

காந்தமலை முருகன் கோவிலில், ராமசாமி குருக்கள் என்பவர் இருந்தார். மிகவும் பக்திமான், தினமும் காவேரி யில் நீராடிவிட்டு அபிஷேகத்திற்குக் காவேரித் தீர்த்தம் எடுத்துச் செல்வார். இவரும் அவருடன் காந்த மலையா னின் அபிஷேகத்திற்குக் குடத்தில் காவேரி நீரை முகந்து, தலையில் சுமந்து போவார்.

இவர்கள் இருவரும் யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இவர்களே வடை தட்டி, பாயசம் வைத்துக்கொண்டு முருகனுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை