பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 60°

செய்வார்கள். இ வ. ர் நாமாவளியைப் படிப்பார். குருக்கள் அர்ச்சனை செய்வார்.

பாம்புக்கடி மந்திரமெல்லாம் கற்று, கிரகண காலத். தில் உருப் போடலானார். மோகனூர்ச் சிவன் கோவிவில் இவரே பூஜை பண்ண ஆரம்பித்தார். பிரம்பு,தண்டத்தை வைத்து அவற்றில் முருகனை ஆவாஹனம்பண்ணிப் பூஜை செய்வார். அங்கிருந்து பிரம்பை எடுத்துவந்து. ‘முருகா! முருகா!’ என்று தம்மைத் தாமே அடித்துக்கொள்வார்: அந்த வலியே இவருக்கு இன்பமாகத் தோன்றும்.

அந்தக் காலத்தில் காந்தமலையில் கோவில் கர்ப்பக் கிருகம் மாத்திரந்தான் இருந்தது. முருகனின் சந்நிதானத். தில் போய் நின்றால் இவருக்கு அவன்மேல் கவிதைகள் பாட வேண்டுமென்று தோன்றும். அந்த நேரம் தம் மனத்தில் தோன்றுகிற பா ட ல் க ைள ெய ல் லா ம் அக்கோவில் சுவர்களில் டைத்தியம் பிடித்தாற்போல் கரியால் எழுதிவைப்பார்: * : *, •

ராமசாமி குருக்கள் தாம் பார்த்த பல வண்ண மலர்களை எல்லாம் பறித்துக் காந்தமலை முருகனுக்கு அலங்காரம் செய்தார் என்றால் இவரோ தாம் படித்த தமிழ்ப்பாக்கள், பாவினங்கள் போலவே அசை ஒசை, சீரமையப் பாடல்கள் பலவும் புனைந்து காந்த மலை முருகனுக்கு அணிவித்தார்.

காந்தமலை முருகன் இவருடைய கவிதைகள் யாவை யும் தனக்கெனக் கொண்டு கேட்டு மகிழ்ந்தான். பாடுவார் பாட்டிற்கே மகிழ்வான் தன்னைப்

பணிவார்தம் பணிவிற்கே பரிவான் தன்னை ஆடுவார் ஆட்டத்திற் கருள்வான் தன்னை

அன்பர்தம் அன்பிற்கே அணைவான் தன்னை, சூடுவார் சென்னிக்கோர் சூட்டா னானைத் - துதிப்பவர்தம் துதிகளுக்கே துணையா வானைக் காடுவாழ் மயிலின்மேற் கொண்டான் தன்னைக்

காந்தமலைக் கோவிலிலே கண்டேன் நானே