பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻五 நாம் அறிந்த கி.வா.ஜ.

என்பதாக இப்படி ஈற்றடியில் காந்தமலைக் கோவிலிலே கண்டேன் நானே’ என்பதாகவும், காந்த மலை வீற்றிருக்கும் கந்தன்தானே’ என்பதாகவும் தேவாரத் திருப்பதிகங்கள் போல இவர் பாடியுள்ள பாடல்கள் பல வாகும். -

காந்தமலை முருகனிடம் காதல் கொண்ட தன் பெண்ணின் நிலையைச் சொல்லி வருந்தும் தாய்போல,

காந்தமலை மீதமரும் கண்ணாளாஉன்

கட்டழகைக் கண்டமுதற் கொண்டுநெஞ்சம் வீந்ததென்பாள் வெள்வளையைத் தாராயென்பாள்

விளையாடா தேஉயிரைக் கவர்வாய் என்பாள் கூந்தலவிழ்க் தசைக்திடத்தன் கூர்வேல் கண்கள்

குமுகுமெனநீர் சொரியுங் கோலமாகி, சேந்தா, என் உயிரே, என்உயிருண் கள்வா -

- என்கின்றாள் என்மகளின் செயல்தான் .

- - - (என்னே

என ஆழ்வார்போல் இவர் வேசாறிப் பாடிய பாடல் களும் உண்டு. ‘ ‘ .

காந்த மலை முருகனிடத்தே இவர் கொண்ட காதல் வெறி, இரவு நேரங்களில் இவரைத் தூங்கவிடாது. பாதி ராத்திரியாக இரு ந் தாலு ம் தம் படுக்கையில் தலையணையைப் போட்டு, போர்வையால் முடிவிட்டு, காந்த மலைக்குப் போய்விடுவார். அது சின்னக்குன்று: தனியாக இருக்கும். இப்போது அதைச் சுற் றி மாளிகைகள் வந்துவிட்டன. அங்கே இவர் போகும். நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். மலைப் பிராகாரத்தில் விழுந்து புரளுவார். பரலைக் கற்கள் உறுத்தும். உடம்பிலே காயம் வரும்; அந்தக் காயம் இவருக்கு மிகவும் இன்பமாக இருக்கும். ‘முருகா, முருகா’ என இறைந்து கத்துவார். அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்து ஜபம் செய்வார். . . .