பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 62

இரவில் ஜபத்தை முடித்துக்கெர்ண்டு, மலை இறங்கி வரும்போது சுற்றி ஒரே ஒளிமயமாகத் தெரியும். பேரொளி தெரியுமே தவிர அந்த ஒளியில் பிற பொருள் எதுவும் தெரியாது. - . - s

மோகனூரில் இருந்த பூரீபதி ஐயர் இவரிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டுக் கேட்டு இவரை இன்னமும் உற்சாகப்படுத்தினார். • .

‘இது ரொம்ப நல்லது. இதைத்தான் தாரணை என்பார்கள். இது ஆண்டவன் திருவருளால் ஏற்படுவது’’ எனப் பெரிதும் வியந்துகூறி இவரிடம் தெய்விக மரியாதை காட்டத் தொடங்கினார். -

இவரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்கள்

இவரை ‘முருகன் அருள்பெற்ற முனிவர்’ எனப் பிறரிடம் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

அதே சமயம் மோகனூரில் இருந்த சிலர், இவன் எங்கே உருப்படப் பேர்கிறான்? இப்படியே சுற்றிக் கொண்டிருந்துவிட்டு ஒரு நாள் சாமி யா ரா. க ப் போகிறான்’ என்று இவர் இல்லாத இடங்களில் எல்லாம். இவரைப்பற்றிச் சொல்லிப் பரிகசிப்பதும் உண்டு.

இந்தச் சொற்கள் இவருடைய தாயாரின் காதில் விழும்போதெல்லாம் அவர் பெரிதும் வருந்துவார்: ஊரில் உன்னைப்பற்றி இப்படியெல்லாம் பரிகாசம் செய்கிறார்களே என இவரிடம் சொல்லிக் கண்ணிர் விடுவார் தாயார். -

ஊரிலே உள்ளவர்கள் நாலுபேர் நாலுவிதமாகத் தான் சொல்லுவார்கள். மற்றவர்கள் சொல்வதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்று இவர் தம் தாயாரைத் தேற்றுவார். - -

யூரீ அருணகிரிநாதர் ஜயந்தி

காந்தமலை முருகனுக்கு ஆண்டுதோறும் விசேஷமான நாட்களில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும். ஆனி