பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 நாம் அறிந்த கி. வா. ஜ,

மாதம் அருணகிரிநாதர் ஜயந்தி அன்று பாற்குடங்கள் எடுப்பார்கள். . . - அன்று காவேரிக்கரைக்குப் பசுமாடுகள் அனைத்தை யும் ஒட்டிச் சென்று அவற்றைக் குளிப்பாட்டி, சந்தனம், குங்குமமிட்டு, அவ்ற்றின் பாலைக்கறந்து குடம் குடமாகச் சிவன் கோவிலில் வைப்பார்கள். .

காந்தமலை முருகனின் அ பி ேஷ க த் தி ற் கு மேள வாத்தியத்துடன் அங்கிருந்து பாற்றாடங்களை எடுத்துச் செல்வார்கள். முருகன் திருவருள் பெற்ற முனிவர்” எனப் பலராலும் மதிக்கப்பெற்ற இவர், எப்போதும் பாற்குடங் கள் எடுப்பவரின் முன்னணியில் இருப்பார். .

கொட்டு மேளத்துடன் ஒரே கோலாகலமாக இவர் கள் பாற்குடங்களை எடுத்துப் போகும்போது, வழியெல் லாம் அங்கங்கே வீட்டிலுள்ள மக்கள் தண்ணிர்விட்டு இவருடைய கால்களைக் கழுவுவார்கள். r

நடுநடுவே இவர் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடு வார், நாகசுரக்காரர்கள் அதையே திருப்பி வாசிப் பார்கள். அந்த நாதம் எல்லோரையும் மெய்ம்மறக்கச் செய்யும். கண்களிலிருந்து தாரை தாரையாக ஆனந்தக் கண்ணிர் பெருகும். மெய்ம்மறந்த ஆவேச நிலைக்கே இவர் போய்விடுவார். இவரை முருகனாகவே நினைந்து

எல்லாரும் இவருடைய காலில் வீழ்ந்து வணங்குவார்கள்.

莓 டு x - էՔ:

பால், பழம் எல்லாம் கொடுத்துக் கர்ப்பூர ஆரத்தி எடுப்பார்கள். வழியில் எதையும் இவர் சாப்பிடுவதில்லை. கூட வருபவர்கள் அவற்றையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு கோவிலுக்கு எடுத்து வருவார்கள். காந்த மலை முருகனுக்கு அபிஷேகமும், தீபாரதனையும்ா ஆன் பிறகு அவற்றை எல்லோருக்கும் விநியோகிப்பது வழக்கம். கண் ணிப் பேச்சு . . . ー

அந்த வருஷம் அருணகிரி ஜயந்திக்குக் கோவிலில், ஏராளமான கூட்டம். பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம்