பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 岱丝

பலர் தம் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் வந்திருந் தார்கள்.

பாற்குடங்கள் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன், காந்தமலை தண்டபாணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அலங்காரமானவுடன் தீபாராதனை ஆயிற்று.

பிறகு காந்த மலையான் சந்நிதியில் பொதுகூட்டம் ஒன்று நடைபெற்றது. பலரும் பேசினார்கள். இவரையும் பேசச் சொன்னார்கள், --

இவர் அன்பு என்ற தலைப்பில் முருகனைப்பற்றிப் பேசினார். இதுதான் இவரது கன்னிப் பேச்சு-பொதுக் கூட்டத்தில் பேசிய முதற் சொற்பொழிவு:

அன்று இவர் தம் பேச்சைத் தொடங்கியவுடன் அங்குமிங்குமாகக் கூட்டத்தில் இருந்த சலசலப்பு அடங்கியது. வெளியூர்களிலிருந்து வ ந் த. வ ர் க ள் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டுமென்று கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுங்கூட முன்னால் இடம் தேடி வந்து உட்கார்ந்தார்கள்.

கூட்டத்தில் இருந்தவர்கள் எவ்விதமான முயற்சியு மின்றி, பெருகி வந்த உள்ளப் பூரிப்புடன் தங்களை மறந்து இவரது சொற்பொழிவில் ஆழ்ந்துவிட்டார்கள். இவரிடமிருந்து மந்திரம் போல் ஒலிக்கும் தன்மை கொண்ட சொற்கள் மணிமணியாக அடுக்கியவைபோல் இசை நயத்துடன் துள்ளி வந்தன. எடுத்துக்கொண்ட பொருளைப் படிப்படியாக இவர் எடுத்துச் சொன்ன முறை புதுமையாக இரு ந் த து. இலக்கிய மணமும், நயமும் இணைந்த அற்புதமான பாணியில் இவரது பேச்சு யாவரையும் அன்பு வலையில் பிணைத்தது.

. . . . கூட்டம் முடிந்தவுடன் முன்பின் தெரியாதவர்கள் பலரும் இவரை நெருங்கி வந்து சூழ்ந்துகொண்டர்ர்கள்.

பச்சு நன்றாக இருந்த தா. க ச் சொல்லிப்

ராட்டினார்கள் . .