பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

・65 - நாம் அறிந்த கி. வா. ஜூ

கிச்சு உடையார் அணிவித்த ருத்திராட்சம்

சேந்தமங்கலத்திலிருந்து வந்திருந்தவர்களில் ஒருவர் கிச்சு உடையார். இ ைற வன் ப ா ல் மிக்க அன்பு கொண்டவர். அவரைக் கிச்சு சுவாமிகள் என்றே மற்றவர்கள் அழ்ைப்பார்கள். அவர், தம் அன்பர்களுக் கெல்லாம் ஒர் ஒற்றை ருத்திராட்சத்தைக் கறுப்புக் கயிற்றில் கோத்துத் தம் கையால் அவர்களின் கழுத்தில் கட்டிவிடுவார். இவருடைய க மு த் தி லு ம் அவர் தாம் ஒர் ஒற்றை ருத்திராட்சத்தைக் கட்டிவிட்டர்ர்டு அன்று இவரது பேச்சையும் வெகுவாகப் புகழ்ந்தார்.

தாங்கள் சேந்தமங்கலம் வந்து, எங்களுடன் தங்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார் அவர்.

சேந்தமங்கலத்தின் பெயரைத் திரும்பக்கேட்டவுடன் இவருக்கு உள்ளம் புல்லரித்தது. அங்கே போய்த் தங்க வேண்டுமென்ற ஆசையுடன் அவ்வூருக்குக் கால்நடை யாகவே நடந்து போனவராயிற்றே! -

தம் உள்ளத்தில் மீதுார்ந்த இன்பத்தால், அங்கு வந்து நான் என்ன செய்வது?’ எனச் சற்றுக் குழப்பத் துடன் கேட்டார். - r.

“எங்களிடையே நீங்கள் கொஞ்சகாலம் தங்கியிருந் தாலே போதும். சும்மா இருக்கக்கூடாது என்றால், எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழும், ஆங்கிலமும் நீங்கள் கற்பிக்கலாம். உங்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் அங்கே நாங்கள் செய்து தருகிறோம்’ என்றார் கிச்சு :உடை யார். - . - அவரது அன்புப் பேச்சு இவரை மிகவும் நெகிழச் செய்தது. எல்லாம் காந்தமலை முருகன் திருவருள்: அவன்தான் நமக்கு இப்படி ஒரு வழியைக் காட்டுகிறான்” என்று உள்ளுற நம்பினார். இவர்.

அதனால் இவர் கிச்சுஉடையாரின் வேண்டுகோளுக்கு உடனே இணங்கினார்.இவர் ஒருபணியை மேற்கொண்டு