பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 66

சேந்தம்ங்கலம் செல்வதற்குத் தாய் தந்தையரும்மறுப்புக் கூறவில்லை, சேந்தமங்கலம் ஜமீன்தாருடன் கட்பு

1925-ஆம் ஆண்டு. ஒரு நாள் இவர் சேந்தமங்கலம் போய்ச் சேர்ந்தார். . - -

கிச்சு உடையாரைப் போய்ப் பார்த்தார். தங்கள் வேண்டுகோளுக்கிணங்க இவர் அந்த ஊருக்கு வந்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. ஊரிலுள்ள பெரியவர்களிட மெல்லாம் இவரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி னார் உடையார். -

மிட்டாதார் பூமாலை உடையாரைச் சந்தித்தார். ஜமீன்தார் ஐராவத உடையாரைச் சந்தித்தார். முத்து வீரம் பிள்ளை. தலைக்கணக்கு ராமசாமி பிள்ளை, வரதராஜுலு செட்டியார், நெற்குப்பை சாமியார், வரதராஜையர், ராமையர், துரைச்ாமி ஆசாரி*போன்ற எல்லோரும் இவரிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்துகொண்டார்கள்.

சேந்தமங்கலம் ஜமீன்தார் ஐராவத உடையார் நல்ல சொத்துக்காரர்; மிக்க செல்வாக்கு உடையவர். அவர் அவ்வூரில் மல்லிகைச் செடிகள் சூழ்ந்த தம் நந்தவனத் துக்கு நடுவில் ஒர் ஆசிரமத்தை அமைத்திருந்தார்.அங்கே ஒரு புத்தகசாலையும் இருந்தது. அந்த ஊருக்கு யாரேனும் துறவியோ,பெரியவரோ வந்தால் அந்த இடத்தில் தங்கச் செய்வார். அதற்குத் தெய்விக ஆசிரமம்’ என்றுபெயர். சேந்தமங்கலம் ஜமீன்தார் ஐராவத உடையார்

இவரைத் தம் தெய்விக ஆசிரமத்தில் தங்கியிருக்கும்படி

சொன்னார்.

“தெய்விக ஆசிரம நிர்வாகக் குழுவில் இவருடன் ஆணியாற்றியவர்கள் இவர்கள். -