பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 - நாம் அறிந்த கி. வா. ஜ.

தெய்விக ஆசிரமத்தின் தலைவராக இருந்தார் பூமாலை உடையார். அதன் செயலாளராக இவரையும், கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் இருக்கச் சொன்னார்.

தெய்விக ஆசிரம வாசம்’

மாதந்தோறும் இவர் தெய்விக ஆசிரம உறுப்பினர் களிடமிருந்து சந்தா வசூலிப்பார். அரிக்கேன் விளக்கு, மண்ணெண்ணெய், தீபத்தெண்ணெய், நெருப்புப்பெட்டி என்று சந்தாப் பணத்திற்குப் பதிலாகச் சிலர் பொருள் களாகவும் கொடுப்பார்கள். ஆசிரமத்திற்குத் தினசரித் தமிழ்ப் பத்திரிகை, வாரப் பத்திரிகைகள் வரும்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை பஜனை நடைபெறும். இவர் அக்கூட்டத்தில் திருப்புகழ்பற்றிப் பேசுவார்; படிப்பார்: அலங்கார, அநுபூதிப் பாடல் களைச் சொல்வார். அவற்றுக்குப் பொருள் விளக்கம் தருவார். சின்னப்பையன் இவ்வளவு நன்றாகச் சொற் பொழிவாற்று கிறானே, என்று அவர்களுக்கெல்லாம் ஒரே ஆனந்தம்.

சாப்பிடுவதற்காக இவர் வெளியில் எங்கும் போன தில்லை. தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை இவர் தாமே சமைத்துக்கொண்டார்.

அவ்வூர்க்காரர்களும் இவர் தமது உணவைத் தயா ரித்துக்கொள்வதற்கு வேண்டிய அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு, காய்கறி, விறகு, பால், நெய் எனத் தங்களால் ஆனவற்றைக் கொடுத்து உதவினார்கள். எல்லாவற்றை யும் விட மேலாகத் தம் பிள்ளைகளையும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்வதற்கு அனுப்பி வைத்தார்கள்.

காலையில் தம்மிடம் படிக்க வரும் குழந்தைகளைக் கண்டவுடன் இவருக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும்: அவர்களுக்கு அவர்களது பள்ளித்தமிழ், ஆங்கிலப் பாடங் களைச் சொல்லிக் கொடுத்தார்.