பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 70

விட்டுப் போய்விடுவாரோ என்றும் கலக்கம் உண்டா யிற்று, உடையாருக்கு. இவரைத் தம் ஊரிலேயே தங்க வைத்துக்கொள்ள யோசனை செய்தார்.

ஜமீன்தார் ஐராவத உடையார்தாம் சேந்தமங்கலம் பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர். எனவே, தமது பஞ்சாயத்து ஒன்றியத்தில் இவருக்குக் குமாஸ்தா வேலை போட்டுக் கொடுத்தார். மாதச்சம்பளம் இருபது ரூபாய். இது இவருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

இப்படிப் பஞ்சாயத்து ஒன்றியத்தில் கணக்கர் பதவி யில் சேர்ந்தவுடன் இவரால் த ா மே சமைத்துச் சாப்பிடுவது சிரமமாக இருந்தது. தம் பெரிய பாட்டி பார்வதி அம்மாளைத் தமக்குச் சமைத்துப் போட அழைத்து வந்து தம்மிடம் வைத்துக்கொண்டார். தம் வருமானத்தில் தம் பெற்றோருக்குப் பணமாகவும் பொருள்களாகவும் இவரால் ஒரளவு உதவி செய்ய முடிந்தது. இவருக்கு மன ஆறுதலை ஏற்படுத்தியது.

‘முருகனின் ஆசியினாலும் பெரியோர்களின் சத் சங்கத்தினரின் கூட்டுறவினாலும், நோயற்ற வாழ்வும், குறைவில்லாச் செல்வமும், நீண்ட ஆயுளும்,விடாமுயற்சி யும், தளரா நெஞ்சமும், எல்லா மேன்மையும் மேன் மேலும் அபிவிருத்தியாக வேணும்’ என இப்படி ஒர் ஆசீர்வாதத்தைத் தந்தையார் வாசுதேவையர் தம் குழந்தைகளுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் எழுதிய பின்னரே விஷயத்தைத் தொடங்குவார். அப்படி அவருக்கு ஒரு பழக்கம். х

‘நம் தந்தையாரின் ஆசீர்வாதப் பலனாகத்தான் முருகனின் கடைக்கண் அருள், பல பெரியோர்களின் நல்லுறவு யாவும் நமக்குக் கிடைத்து வருகின்றன. ஒன்றன் பின் ஒன்றாகப் பல அநுகூலங்கள் விளைகின்றன என இவர் அடிக்கடி நினைந்து மனம் உருகுவார். -