பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I - - நாம் அறிந்த கி. வா. ஜ. சகோதரிகள் திருமணம் -

இவரைப்பற்றிய கவலை தாயாருக்கு ஒ ர ள வு நீங்கியது. அவர் அப்போது கருவுற்றிருந்தார். மாசம் அதிகம் ஆவதற்குள் தம் பெண்கள் மூவரில் இரண்டு பேருக்காவது உடனடியாகத் திருமணம் செய்யவேண்டு மெனக் கவலைப்பட்டார். -

அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே தி ரு ம ன ம் செய்துவிடுகிற பழக்கம் இருந்தது. அதுவும் இ வ. ர் க ள து மாவட்டத்தில் பெரியவர்கள் ஐந்தாறு திருமணங்களை ஒன்றாகச் சேர்த்துக் ‘கம்யூனிட்டி மாரியேஜ் என்பதாக ஒரிடத்தில் ஒரே நாளில் நடத்தி வைப்பார்கள். உபநயனங்களையும் இப்படி ஒன்றாகச் சேர்ந்து நடத்துவதும் உண்டு இந்தக் கூட்டுத் திருமண முறை பல ஏழை-நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் நல்ல திட்டமாக இருந்து வந்தது. - -

பெண் வீட்டார் தங்கள் பெண்களை யார் யாருக்குத் திருமணம் செய்துகொடுப்பது என்பதை அவர்களே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். மற்றும் எதிர் ஜாமீன் கொடுப்பது, சேலை, நகைநட்டு வாங்குதல் போன்ற செலவுகளையும் அவரவர்கள் தகுதிக்கேற்ப அவரவர்களே செய்துகொள்ளவேண்டும். -

திருமணத்தன்று ஆகும் செலவுகளை மட்டும் இப்படிக் “ கம்யூனிட் டி மாரியேஜ் நடத்தி வைப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். - -

தகப்பனார் தம் பெண்களின் கல்யாணத்திற்காகத் தமக்குப் பூர்விகமாக இருந்த கொஞ்சம் நிலத்தையும் விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு இவருடைய சகோதரியர் மதுகரத்திற்கும் மங்களத்திற்கும், சேலை நகைநட்டு முதலியவற்றை வாங்கியதுடன் கொஞ்சம் எதிர் ஜாமீனும் கொடுத்து மாப்பிள்ளைகளையும் நிச்சயித்தார். -