பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 - நாம் அறிந்த கி. வா. ஜ:

“எங்களுக்கு அவரைப்பற்றிப் புகார் வந்துள்ளதால் அவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம்’ எனத் தாங்கள் வந்த காரணத்தையும் காவலர்கள் சொன்ன வுடன், “இந்தக் கல்யாணம் நடந்தாற் போலத்தான்!” எனப் பலரும் இடிந்து போனார்கள். தமக்கு நெருங்கிய உறவுக்காரர் என்று யாருமே இல்லையென அவர் முன்பு சொல்லிக்கொண்டதற்கு இதுதான் காரணம் போலும் எனவும் நினைக்கத் தொடங்கினார்கள். யார் முகத் திலும் ஈயாடவில்லை.

இவரோ, இப்போது என்ன, கல்யாணமா ஆகி விட்டது? ஏன் கவலைப்படுகிறீர்கள்? கும்பகோணம் போயிருப்பவர் வரட்டுமே. வந்தவுடன் விசாரிக்கலாம்’ எனக் கொஞ்சங்கூடப் பதற்றம் இல்லாமல், கலங்காத சித்தத் திடத்துடன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து முருகனைத் தியானிக்க ஆரம்பித்துவிட்டார்.

என்னடி, இவன் கொஞ்சங்கூடக் கவலைப்படாமல் இப்படி இருக்கிறான்?’ என இவருடைய பெரிய பாட்டியார் மனம் வருந்தினார். -

அதற்கு, ‘அவனது சுபாவம் அதுதான். உங்களுக்குத் தெரியாதா, அவனது குணம்?’ என இவருடைய தாயார் மனவேதனையுடன் சொன்னார்.

கும்பகோணத்திலிருந்து மாப்பிள்ளை திரும்பிவர நேரமாக ஆக, இன்ஸ்பெக்டர் சொன்னதுதான் உண்மையாக இருக்கும். விஷயம் வெளிப்பட்டது. தெரிந்து எங்காவது ஒடியிருப்பான். அவன் எங்கே இனி வரப்போகிறான்? என நம்பிக்கை இழந்து பெண்கள் பேசத் தொடங்கினார்கள். . s

அப்போது இவர் அவர்களது பேச்சில் கலந்து கொள்ளவில்லை. இரவு வெகுநேரம் கழித்து அந்தக் கிருஷ்ணமூர்த்தி வந்தார்; குடும்பத்திற்காக வாங்கிய

நா-5 - 3. -