பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி . . . - 86

பெண்களைக் கண்டால் ஒருவனுக்கு முதலில் அவர் களுடைய தனத்தைப் பார்க்க ஆசை தோன்றும்; அது பூரிப்பாக இருந்தால் அவனுடைய மனத்தில் மோகம்

மிகுதியாக உண்டாகும். அதனால்,

கொங்கை இளநீரால் என்று சொன்னார் கவி:

‘பின்பு அந்தப் பெண்ணோடு பேச்சுக் கொடுக்கத் தோன்றும். பேசும்போது அவளுடைய இனிய சொல் அவனது உள்ளத்தில் குளிர்ச்சியை உண்டாக்கிக் கரும்பு போல் இனிக்கும். எனவே,

குளிர்ந்த இளஞ்சொற் கரும்பு என்றார் கவி, -

  • அதன்பின் பெண் மோகம் என்ற தடாகத்தில் மூ ழ் கு வான் . பிறகு காமம் என்னும் தாபம் திர அவளது கூந்தல் நிழலில் தன்னுடைய வெப்பத்தை ஆற்றிக்கொள்வான். -

பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் மங்கைகறுங் கொய்தாம வாசக்குழல் கிழற்கீழ் ஆறேனோ வெய்து ஆம்அக்காம விடாய் வெப்பு. இப்படி இன்னும் விளக்கமாகச், சுமார் ஒரு மணி நேரம் இவர் பேசினார். இவரை அங்கு அழைத்துச் சென்ற உடையார் நண்பர்கள் எல்லாரும் இவரது பேச்சைக் கேட்டு வியந்தார்கள். ஆனால், இவர் சிறிதும் சலனமின்றி வெட்கமும் இன்றி அவிரோத ஞானச் செல்வராக நின்று பேசியதைக் கேட்ட அவர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள். இந்த மனிதரை எந்த விதத்திலும் மயக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள் -

ஆசிரமத்திற்குத் திரும்பிய பின், ‘ஐயா, எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள். தாங்கள் சிறுபிராயத்தின

சக இருப்பதால் தங்களுக்கு உலகியல் ஆசையில்