பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母7° நாம் அறிந்த கி. வா. ஜ.) ஈடுபாடு ஏற்படச் செய்ய நினைத்தோம். தாங்கள் இதற் கெல்லாம் சலனம் அடைபவராக இல்லை. குமரகுருபர சுவாமிகள். சிவப்பிரகாச சுவாமிகளைப்போல் தாங்கள் வாழவேண்டும் தங்கள் துறவினால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும்’ என்றும் சொன்னார்கள்:

காசி சுவாமிகள்

சேந்தமங்கலத்தில் நிஜானந்த சரஸ்வதி’ என்னும் துறவியார் இருந்தார். அவர் காசியில் வாழ்ந்துகொண் டிருந்தவர். பூரீமத் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் பூப் பிரதட்சிணம் செய்து வந்த போது காசிக்கும் சென்றார்கள். அப்போது அவரைத் தரிசித்து உபதேசம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நிஜானந்தருக்குக் கிடைத்தது.

தம் குருநாதர் சஞ்சரித்துக்கொண்டிருந்த சேந்த மங்கலத்திற்கே அவரும் வந்துவிட்டார். அவரை எல்லோரும் காசி சுவாமிகள் என்றே அழைப்பார்கள்: அம்பிகையை உபாசனை செய்து சுவாமிகளின் திருவருளைப் பெற்றவர். . - . . ;

சிவ விஷ்ணு, பிரம்ம சொருபியாகிய தத்தாத்ரேயர் அவதுரத பரம்பரைக்கே ஆதி குரு. தத்தாத்ரேயருக்கு - இவருடைய குருநாதர் சேந்தமங்கலத்தில் தாம் தங்கி யிருந்த சிறு குன்றில் கோவில் எடுத்தார். அதுமுதல் தான் அந்தக் குன்றுக்கு தத்தகிரி என்று பெயர் வந்தது.

அந்தத் தத்தாத்ரேயர் கோவில் திருப்பணிக்குக் காசி சுவாமிகள் பல இடங்களுக்கும் சென்று உபந்நியாசம் செய்து பொருள் தொகுத்துக் கொடுத்தார். பாஷ்யங்கள் எல்லாம் படித்தவர், வடமொழியிலே மட்டுமின்றித் தமிழிலும் சிறந்த பயிற்சி உள்ளவர் அருமையாகச் செய்யுள் இயற்றுபவர்; அவதூத வெண்பா மாலை: என்னும் பிரபந்தம் ஒன்றை அவரே தம் குருநாதரைப் பற்றி இயற்றியுள்ளார். -