பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 8 &

மோகனூரில் இருந்தபோது அபயானந்தரிடம் நெருக்கமாகப் பழகியது போலவே, சேந்தமங்கலத்தில் காசி சுவாமிகளிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. -

இவர் தமிழ் நூல்கள் பலவற்றைக் கற்ற தில்லை. ப ள் வளி க் கூ ட த் தி ல் பாடமாக இருந்த சில “கம்ப ராமாயணச் செய்யுட்களையும், பிறவற்றையுமே கூர்ந்து படித்திருந்தார், திருப்புகழ் கந்தர் அலங்காரம் ஆகியவற்றைப் பற்றி எல்லாம் பேசுவார். காந்தமலை முருகனின்மேல் செய்யுட்கள் இயற்றுவார். இவற்றை யெல்லாம் கண்டு காசி சுவாமிகள் இவரிடம் மிக்க அன்பு

கொண்டிருந்தார். -

தம் குருநாதர் இவருக்கு சந்நியாசம் கொடுக்க மறுத்ததும் அவருக்குத் தெரியும். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளிடம் சென்று முறையாகத் தமிழ் படிக்க இவர் விரும்பியதையும் அறிவார்.

சேந்தமங்கலம் ஜமீன்தார் ஐராவத உடையார் அதற்கு இணங்கவில்லை என இவர் சொன்னபோது, “ உமக்குத் தம்பி பிறந்து விட்டான். பூரீலபூரீ ஞானியார் சுவாமிகளிடம் தமிழ் படிக்கப் போய் நீங்கள் துறவியாகி விடலாம். அதனால்தான் உம்மை அங்கே போக வேண்டாம் எனத் தடுத்திருக்கிறார்’ எனச் சிரித்துக் கொண்டே சொன்னார். - - *.

ஒரு நாள் காசி சுவாமிகள் இவரது தமிழார்வத்தை வியந்து நீங்கள் பூரீமத் ஐயரிடம் இருக்க வேண்டியவர்’ என்று சொன்னார். மகாமகோபாத்தியாய சாமிநாதய்யரைப் பற்றி அறிதல்

ン・・・・ ரீமத் ஐயரவர்களுடைய ஊர் தஞ்சை மாவட்டத்தி லுள்ள உத்தமதானபுரம் ஆகும். -