பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 நாம் அறிந்த கி. வா. ஜ.

சங்கீத வித்துவானாகிய பூரீ வேங்கடசுப்பையருக்கும் பூரீமதி சரஸ்வதி அம்மாளுக்கும் மூத்த குமாரராக அவர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி பிறந்தார்து - ,

தம் இளம் வயதில் அவர் தம் தந்தையாரிடமும், திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியரிடமும் கல்வி பயின்றார். -

அவரது தமிழார்வத்தைக் கண்ட அவருடைய தந்தையார் அவருக்கு அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசல் ரெட்டியார் ஆகியோரிடம் தமிழ் படிக்க வாய்ப்பு அளித்தார். - -ح . அவரது தமிழ்ப் பசி அதிகமானதே தவிரத் தனிய வில்லை. அந்தக் காலத்தில் தமிழுக்கென்றே கல்லூரி ஏதும் இல்லை. - -

திருவாவடுதுறை ஆதீனத்தில் சிறந்த தமிழ்ப் புலவ ராகவும், பெருங்கவிஞராகவும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இருக்கிறார்கள். அவர் பல பிள்ளைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு தமிழ் சொல்லித் தருகிறார்கள்’ என்ற செய்தி ரீமத் ஐயரின் தந்தையாருடைய காதில் விழுந்தது. உடனே தம் மகனை அழைத்துக்கொண்டு போய்,பிள்ளையவர்களிடம் 1871-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்படைத்தார்:

பிள்ளையவர்கள் அப்போது மாயவரத்தில் இருந் தார்கள். ரீமத் ஐயரின் பெயர் அப்பேர்து வேங்கட ராமன். அது அவருடைய முன்னோர் பெயராதலால் விட்டிலுள்ளவர்கள் அவரைச் சாமா என்றே கூப்பிடு இா:ள். அது சாமிநாதன் என்பதன் சிதைவு

அதை அறிந்த பிள்ளையவர்கள் ரீமத் ஐயருக்குச் ‘சாமிநாதன் என்ற முழுப்பெயரைச் சூட்டி, தம்மிடம் . வைத்துக்கொண்டு தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்கள்.

நா-6