பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 90

பூரீமத் ஐயர், பிள்ளையவர்களின் மறைவு வரை (1-2-1876) அவரிடமிருந்து தமிழ் கற்றார். பின்னரும் திருவாவடுதுறையில் இருந்துகொண்டு அங்குள்ளவர் களுக்குத் தமிழ்ப் பாடம் சொல்லும் பணியை மேற் கொண்டார். - தியாகராச செட்டியார் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டவர். அவர் அப்போது கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். 1880-ஆம் ஆண்டு தாம் ஒய்வுபெறும்போது, தம் வேலையை பூரீமத் ஐயருக்குக் கிடைக்கச் செய்தார்.

அதிலிருந்து 1903-ஆம் ஆண்டுவரை கும்பகோணம் அரசினர் கல்லூரியிலே தமிழாசிரியராக பூரீமத் ஐயர் பணியாற்றினார். 1903-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியிலே தமிழாசிரியராக மாற்றம் பெற்றார். - அவருடைய ஆசிரியர் கவிஞர் கோமான், பிள்ளை யவர்கள் தமிழ்ப்பாடம் சொல்வதையும், பல புராணங் களைப் பாடுவதையுமே தம் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார்கள். * . . ; -

அவரிடம் பாடம் கேட்ட ரீமத் ஐயர் தம் ஆசிரியரைப்போலவே அ தி க ம .ா. க த் தமிழ்ப் புலமை பெற்றார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும், தம் வீட்டிற்கு வரும் மாணவர்களுக்கும் தமிழ்ப்பாடம் சொன்னார். அதோடு கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழ்நாடு முழுவதும் மூலைமுடுக்குகள் எல்லாம் சென்று பனையோலைச் சுவடிகளாக இருந்த பழைய தமிழ் நூல்கள். அவற்றின் உரைகள் ஆகியவற்றைத் திரட்டி வந்த்ார். அவருடைய ஆசிரியரான பிள்ளையவர்களே தெரிந்து, படித்திருக்க வாய்ப்பில்லாத அந்தப் பழந்தமிழ் இலக்கியங்களையெல்லாம் தெளிவாக ஆராய் ந் து துடித்து நல்ல முறையில் பதிப்பித்து உலகுக்கு அளித்த சிற்ந்த பதிப்பாசிரியர் ஆகவும் விளங்கினார். ரீமத்