பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 நாம் அறிந்த கி.வா.ஜ: இப்படித் தம் வாழ்வின் நோக்கத்தையெல்லாம் பெரும்பாலும் தமிழ்த் தொடர்பு உடையதாக ஆக்கிக் கொண்ட ஸ்ரீமத் ஐயரைப் பாராட்டும் வகையில் அவருக்கு மகாமகோபாத்தியாயப் பட்டத்தை 1906-ஆம் ஆண்டு அரசு வழங்கிக் கெளரவித்தது. - அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்

இன்றெம்மை ஆள்வோ ரேனும் பன்னியசீர் மகாமகோ பாத்தியா

யப்பதவி பரிவின் ஈந்து பொன்னிலவு குடந்தைககர்ச் சாமிநாதன்

தனக்குப் புகழ் செய்வாரேல் முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்

இவன் பெருமை மொழிய லாமோ?

மகாகவி பாரதியார் ரீமத் ஐயரது பெருமையை அப்போது இப்படி வியந்து பாடினார். -

1919-ஆம் ஆண்டு கல்லூரிப் பணியிலிருந்து ஸ்ரீமத் ஐயர் ஒய்வு பெற்றார்.

பின்பும் தமிழ்ப்பாடம் சொல்லும் பணியிலும், தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்: ராஜா அண்ணாமலைச் செட்டியார் 1924-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் கலைக் கல்லூரி ஒன்றையும் வடமொழிக் கல்லூரி ஒன்றையும், தமிழ்க் கல்லூரி ஒன்றையும் ஏற்படுத்தினார். ‘ ‘ ‘ ‘. - இதுதான் தமிழுக்கென்று தனியாக ஏற்படுத்தப் பட்ட முதல் தமிழ்க் கல்லூரி. -

இந்தத் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டுமெனச் செட்டியார் கேட்டுக்கொண்ட்” போது ஸ்ரீமத் ஐயர் அதற்கு இணங்கினார்: மீனாட்சி தமிழ்க் கல்லூரி யின் முதல்வர் பொறுப்பை 1924 இல் ஏற்ற ரீமத் ஐயர் அப்போது சிதம்பரத்தில் இருந்: wo : : : :..«*