பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 9多”

“என்னை ஏற்றுக் கொள்வாரா?’ ‘

காசி சுவாமிகளுக்கு மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையரைத் த்ெரியும்; ஸ்ரீமத் ஐயரது தமிழ்த் தொண்டைப்பற்றியும், அவர் பதிப்பித்து வரும் சங்க கால நூல்களின் சிறப்புப்பற்றியும் இவரிடம் விரிவாக வியந்து கூறினார், - -

தம்மிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பிள்ளை, சிதம்பரம் சென்று மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் ஸ்ரீமத் ஐயரிடம் படித்துக்கொண்டிருக்கும் செய்தியை யும் சொன்னார்.

நீங்கள் அவரிடம் சென்றால்தான் முறையாகத் தமிழ் படிக்க உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்; உங்களது தமிழ் அறிவும் பெருகும் என்றார் காசி சுவாமிகள். “நான் போனால் அவர் எ ன் ைன ஏற்றுக் கொள்வாரா?’ என இவர் ஏக்கத்துடன் கேட்டார்.

“நீங்கள் அவரிடம் சென்றால், நிச்சயம் அவர் உங்களை அன்பு ட ன் ஏற்றுக்கொள்வார்’ எனச் சுவாமிகள் உறுதியாகக் கூறினார். -

இந்தத் தகவலை உடனே ஐராவத உடையாரிடம் சொல்ல வேண்டுமென்ற ஆசை இவருக்கு எழுந்தது. அவர் ஏதேனும் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் கூடவே தோன்றியது.

நல்ல வேளையாக அந்தச் சமயம் வ்ேளுர் இந்துப் பாடசாலைத் தமிழாசிரியர் கணபதி ஐயர் சேந்தமங்கலம் வந்திருந்தார். அவரிடம் சென்று இவர் காசி சுவாமிகள் கூறியதைச் சொன்னார். - - - -

புரீமத் ஐயரைப்பற்றி அவரும் நிறையக் கேள்விப் பட்டிருந்தார். எனவே, “ஆகா! இது நல்ல யோசனை: அவ்ரிடம் சென்று நீங்க ள் தமிழ் கற்றால்தான் உலகூட்டும் வற்றாத ஊற்றாகத் திகழ்வீர்கள். உங்களது: