பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:9 3 . நாம் அறிந்த கி. வா. ஜ.

எழுத்தாண்மை உரம் பெறு ம்’ என்று உற்சாக மூட்டினார். - .

மேலும், சமயம் பார்த்து ஐராவத உடையாரிடம் சொல்லுங்கள் அவரும் இதற்கு உடன்படக்கூடும்’ எனத் தைரியம் அளித்தார்.

ஒரு நாள் ஐராவத உடையார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தபோது இவர் அவரிடம் இந்தத் தகவலைச் சொன்னார். - .

ஐராவத உடையார் இவர்பால் மிக்க அன்பு உடையவர். தம் உறவினராகிய கிச்சு உடையார் இவர் பால் வைத்திருந்த பெருமதிப்பை நன்கு அறிவார். இவர் மேலும் மேலும் பல தமிழ் நூல்களைக் கற்றுப் பெரும் புலவராக வரவேண்டுமென்ற ஆசை அ வ ரு க் கு ம் உண்ட்ாயிற்று. காசி சுவாமிகளையும் அவர் அறிவார். அவர் சொன்னார் என்றவுடன், “சரி; கவலையை விடுங்கள்! நானே உங்கள்ை அழைத்துக்கொண்டு போய் ஸ்ரீமத் ஐயரிடம் விடுவதற்கு முய ற் சி செய்கிறேன்’ என்றார். ;

இவருக்கு ஒரே மகிழ்ச்சி. சிதம்பரம் போகாமல் இருப்பேனோ,புரீமத் ஐயரைக் காணாமல் இருப்பேனோ” என அதுமுதல் இவரது மனம் நந்தனைப்போல

கிண்ணாரங்கொட்டி குதிக்கத் தொடங்கிவிட்டது,

ஜோதி தரிசனம் காணுதல்

இவருடைய நண்பர்களில் சிலர் ஆண்டுதோறும் தைப்பூச விழாவிற்கு வடலூர் சென்று வருவது வழக்கம். அந்த ஆண்டு தைப்பூசத்திற்கு வடலூர் போகும்போது. ஆரீமத் ஐயரையும் பார்த்துவரலாம் எனச் சேந்தமங்கலம், ஜமீன்தார் கருதினார். - - -

1927-ஆம் ஆண்டில் தைப்பூசம் பிப்ரவரி மாதம் வந்தது. ஒரு காரை அமர்த்திக்கொண்டு சேந்தமங்கலம்