பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சத்குருவைத் தேடி 9 &

ஜமீன்தார். இவரையும் கிச்சு உடையாரையும் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு வடலூர் வந்தார். -

வடலூரில் தைப்பூச விழாவில் `றுரீமத் ராமலிங்க சுவாமிகளின் ஜோதி தரிசனம் செய்துகொண்டார்கள். பின்னர் அங்கிருந்து சிதம்பரம் போனார்கள்.

ஸ்ரீமத் ஐயர் அப்போது சிதம்பரத்தில் தங்கியிருந்த வீடு இவர்களுக்குத் தெரியாது. எனினும், மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நடேச முதலியார், ஆறுமுக முதலியார் ஆகிய இருவரையும் கிச்சு உடையாருக்கு நன்கு தெரியும். எனவே, கிச்சு உடையார் அவர்களிடம் சென்று ரீமத் ஐயர் தங்கியிருக்கும் இல்லத்தை அறிந்து வந்தார்.

இவர்கள் எல்லோரும் ஸ்ரீமத் ஐயரது வீட்டிற்குச் சென்றார்கள். அப்போது அந்த வீட்டுத் திண்ணையில் ஒருவர் உ. ட் கார் ந் தி ரு ந் தா ர் . இவர்களைக் கண்டவுடன் அவர் எழுந்திருந்தார். அவர்தாம் ரீமத் ஐயர் போலும் என நினைத்து அவரிடம் இவர் மிக்க அடக்கத்துடன் நெருங்கினார். இவர்தாம் ஸ்ரீமத் ஐயரை இதற்குமுன் பார்த்ததில்லையே! -

இவர்கள் யாரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை அவர் ஊகித்துக்கொண்டு, “நான் நாகப்பச் செட்டியார். ஸ்ரீமத் ஐயர் உள்ளே இருக்கிறார்கள். நீங்கள் உள்ளே போங்கள்’’ எனச் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தவுடன் இவர் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். - ‘இவரது அவசரத்தைப் பா ரு ம்’ எனக் கிச்சு, உடையார் தம் பக்கத்தில் இருந்த ஜமீன்தாரிடம் கிசுகிசுத்ததைத் திரும்பிப் பார்த்தவுடன் இவருக்கே வெட்கம் உண்டாகிவிட்டது.

முதலில் கிச்சு உடையார் உள்ளே போனார்: அவரைத் தொடர்ந்து இவர்களும் சென்றார்கள்."