பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 96.

“நான் என் ஆசிரியப்பிரான் பிள்ளை அவர்களிடம் சென்றபோது அவர்கள் இப்படிச் சொன்னார்கள். படிக்க வரும்போது மிகவும் பணிவாக நடந்துகொள் கிறார்கள். படிப்பு முடியும்வரை இருப்பதில்லை. நடுவி லேயே சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடுகிறார்கள். ஊர் போய் வருவதாகச் சொல்லிப் போகிறவர்களும் திரும்ப வருவதில்லை. இப்படி என்னிடம் படித்ததாகப் பாவனை. காட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். எதையும் முழுக்கப் படிக்காமல் என்னிடம் படித்ததாக ஊரில் சொல்லிக் கொண்டும் திரிகிறார்கள். இதனால் படிக்க யார் வந் தாலும், அவரை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.அப்போது, என்னடா இப்படிச் சொல்கிறாரே!” என யோசித்தேன். அது முழுக்க முழுக்க உண்மை என்பதை நானும் என் அநுபவத்தில் கண்டு விட்டேன்’ என்றார் ஸ்ரீமத் ஐயர்.

சட்டென்று இவர், “நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன். எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் தங்களிடம் இருந்து பாடம் கேட்க விடும்புகிறேன்’ என

உணர்ச்சி மீதுரச் சொன்னார். .

பூர்மத் ஐயர் கிச்சு உடையாரைப் பார்த்துச் சொன் னார்: ‘ தொடர்ந்து இருந்து பாடம் கேட்கிறவர்களிடந் தான் எனக்கும் அபிமான்ம் உண்டாகிறது’ என்றார்.

கிச்சு உடையார், மோகனூரிலிருந்து இவர் தம் பெற்றோர்களைப் பிரிந்து தம் அழைப்பையேற்றுச் சேந்தமங்கலம் வந்து தங்கியிப்பதையும், தம் ஊர்க் குழந்தைகளுக்கும், பாதிரியாருக்கும் தமிழ் சொல்லித் தருகிறார் என்ற விவரத்தையும் குறிப்பிட்டு, ‘இவர் மிக்க மனத் திண்மை உடையவர். தங்கள் விருப்பப் படியே நடந்துகொள்வார்’ என மிக்க உறுதியோடு சொன்னார், x . . .

மர்மத் ஐயர் இவரிடம் ஏதேனும் தமிழ்ப்பாடல் ஒன்றைச் சொல்லும்படியாகக் கேட்டார்.’ א