பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*97 - நாம் அறிந்த கி. வா. ஜ8

அந்தக் காலத்தில் கம்பராமாயணப் பாட்டுத் தெரிந்: தவன்தான் உயர்ந்த புலவன் என்ற எண்ணம் இருந்து வந்தது. இவரிடம் ‘கம்பராமாயணம் முழுமையும் ஏது? ‘அருணாசலப் புராணம் வாங்கியிருந்தார். படித்தார். பள்ளிக்கூடப் புத்தகத்தில் படித்த கம்பராமாயணப் பாடல்களில் இரண்டு பாட்டை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பேசச் சொன்னால் பேசுவார்கு இப்படிச் சொற்பொழிவாற்றத் தெரியுமே தவிர, அதிகம் படித்ததில்லை. - -

இவரை ஸ்ரீமத் ஐயர் தமிழ்ப் பாடல் ஒன்றைச் சொல்லும்படியாகப் பணித்தவுடன் தமக்குத் தெரிந்த மந்திரை சூழ்ச்சிப் படலத்திலிருந்து ஒரு பாடலை இவர்

சொன்னார். -

கூனி இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகிற: தென்று கைகேயியிடம் சொல்லும் பாடல் அது, அவ ளிைடம் அவளுக்குக் கோபம். அவன் முடிசூடுவது அவளுக் குப் பிடிக்கவில்லை. எனவே, ஆண்கள் சிரிக்க ஆண்மை மாசுபடப் பெண் ஒருத்தியைக் கொன்றவன் (தாடகை வதம்) நாளை ராஜாவாகப் போகிறான்’ என இராமனை இழித்து ஏளனம் செய்வதுபோன்ற பொருள் தொனிக்கும் படி சொல்கிறாள். - - - -

‘ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்

தாடகை எனும்பெயர்த் தைய லாள் படக் கோடிய வரிசிலை இராமன் கோமுடி - சூடுவன் காளை வாழ்விதெனச் சொல்லினாள்

என்ற இந்தப் பாடலைச் சொல்லிப் பொருளையும் பொதுவாக விளக்கினார். - * ...,

“இதில் ஏதாவது நயம் சொல்ல முடியுமா?” என்று. ஸ்ரீமத் ஐயர் கேட்டார்.

இராமனைப்பற்றி இப்படி ஏளனமாகச் சொல், கிறோமே. நாளைக்கு ராஜாங்கத்திலிருந்து யாரேனும்