பக்கம்:நாயகர் பெருமான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

உண்மையில் தாங்கள் இறைவனின் தூதராக இருந்தால் நஞ்சு தங்களை ஒன்றும் செய்யாது. இல்லாவிட்டால் தங்களிடமிருந்து நாங்கள் விடுதலை பெறுவோம். அதற்காகவே இவ்வாறு செய்தோம்.” என்று கூறினார்கள்.

பெருமானவர்கள் தங்களைப் பொறுத்த வரையில் பழிவாங்க நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், பாஷர் என்பவர் உயிர் துறந்தது அவர்களுக்குப் பெருந் துயரம் அளித்தது. அதனால், அக்கொலைக்குப் பழி யாக அப்பெண்ணை வெட்டி விடும்படி கட்டளை யிட்டார்கள்.

21. மகளைக் கொன்றவனுக்கும் மன்னிப்பு

பெருமானவர்களின் மகளார் ஸைனப் மக்காவிலிருந்து மதினாவிற்குச் செல்வதற்காக ஒட்டகத்தின் மீது ஏறினார்கள். அப்போது ஹப்பார் என்பவன் எதிர்பாராத விதமாக ஈட்டியைத் திருப்பிக் கொண்டு மகளாரைத் தாக்கினான். அதனால் அவர்கள் கீழே விழ நேரிட்டது. கர்ப்பிணியாக இருந்த மகளார் கீழே விழுந்த அதிர்ச்சியினால் கருப்பங் கலைந்து சில நாட்களில் உயிர் துறக்க நேரிட்டது. அவர்கள் இறந்த செய்தி யறிந்ததும் ஹப்பார் என்ற அத்தீயவன், அங்குத் தங்கியிருந்தால் தன் உயிருக்கு ஆபத்து நேரிடும் என அஞ்சி அயல் நாட்டிற்கு ஓடி விட்டான்