பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேச நாயனுர் 15

வேண்டும் என்ற எண்ணம் வரும். குழந்தையினிடம் அன்புள்ள அன்னைக்கு அதற்கு உணவு ஊட்ட வேண்டும், அதை உறங்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் எழுகின்றன. குழந்தை வளர வளர அதற்கு வண்ண வண்ண ஆடை அணிய வேண்டும் என்று எண்ணி முயலுகிருள். பல வகை அணிகளைப் பூட்டுகிருள். தம்மினும் உயர்ந்த கிலேயில் உள்ளவர்களிடம் தாழ்ந்த கிலேயில் இருப்பவர்கள் அன்பு பூண்டால் அவர்களுக்கு எப்போதும் ஏவல் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

சிவனடியார்களிடம் ஈடுபாடுடையவர்கள் தம்மால் ஆன தொண்டுகளே அவர்களுக்குச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பணமுடை யார் பணம் அளிப்பார்கள்; சோறளிப்பார்கள். எந்தப் பொருளேனும் தம்மிடத்தில் பிறருக்கு உதவும்படி யிருந்தால் அதை அடியார்களுக்கு அளிக்க விரைவார்கள்.

காம்பீலி என்னும் பழம்பதியில் வாழ்ந்த நேச நாயனர் சிவனடியார்களிடம் ஆழ்ந்த கேசம் உடையவராக விளங்கி ர்ை. அவர் நெய்தல் தொழில் செய்பவர். சிறிதும் பாவம் இல்லாத தொழில் அது; திருவள்ளுவர் மேற்கொண்டிருந்த தொழில். இறைவன் தமக்கு அத்தொழில் செய்யும் வாய்ப்பை அளித்தது, சிவனடியார்களுக்குத் தொண்டு புரிவதற்காகவே என்று உளம் கொண்டார் நேச நாயஞர்.

எப்போதும் இறைவனைத் தியானிப்பதும், அவ அனுடைய திருவைந்தெழுத்தை ஒதுவதும், தமக்குரிய கைத் தொழில் திறமையால் சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைவகைகளை கெய்து வழங்குவதுமாக மூன்று கரணங் களாலும் திருத்தொண்டு புரிந்து வந்தார் அவர். சிவனடி யார்களின் விருப்பத்துக்கு ஏற்ற ஆடைகளும், இடுப்பில் அரைஞாண் கயிறுபோலக் கட்டும் கீளும், கோவணமும் கெய்து வழங்கி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/21&oldid=585761" இலிருந்து மீள்விக்கப்பட்டது