பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாயன்மார் கதை

ாேச நாயனர் ஆடை நெய்து வழங்குவதை அறிந்து பல சிவனடியார்கள் அவர் பால் வந்து தமக்கு வேண்டிய வற்றைப் பெற்றுச் சென்ருர்கள்.

இவ்வாறு வாழ்நாள் முழுவதும் இடையருது திருத் தொண்டு செய்து வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடி நீழலை அடைந்து பேரானந்தப் பெருவாழ்வு பெற்ருர் நேச நாயனுர்.

68. கோச்செங்கட் சோழ நாயனர்

சோழ நாட்டில் பொன்னிப்பூங்கரையில் விளங்குவது

திருவானைக்கா என்னும் திருத்தலம். அது பஞ்சபூதத் தலங்களில் ஒன்று; அப்புத் தலம். அங்கே இறைவனுக்கு அப்புலிங்கம் என்றும், செழுர்ேத்திரள் என்றும் பெயர் வழங்கும்.

அந்தத் தலத்தில் இறைவன் வெண்ணுவல் மரத்தின் கீழ் எழுந்தருளி யிருக்கிருன். அதனால் அத்தலத்துக்கு ஜம்புகேசுவரம் என்ற திருநாமம் வழங்குகிறது. அந்தப் பெருமான ஒர் யானே நாள்தோறும் காவிரிநீர் கொண்டு வந்து ரோட்டி, இலேயாலும் மலராலும் அருச்சனை செய்து வழிபட்டது. அந்தக் காரணத்தால் அதற்குத் திருவானைக்கா என்ற பெயர் உண்டாயிற்று.

அங்கே ஞானமுடைய ஒரு சிலந்தி நாவல் மரத்தி லிருந்து சருகு உதிராவண்ணம் தன் வாய் நூலால் மேற் கட்டியைப்போல ஒரு வலையைக் கட்டியது. இறைவனே வணங்க வந்த யானே அந்த வலையைப் பார்த்து, "ஐயோ! ஈதென்ன அநுசிதம்' என்று வருந்தி அதைக் கலைத்து விட்டது. அதைக் கண்டு சிலந்தி வருந்தியது. "இறைவன் மேல் சருகு விழாமல் பாதுகாக்க கான் கட்டிய நூற்பந்தலை இது அழிப்பதாவது என்று சினங்கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/22&oldid=585762" இலிருந்து மீள்விக்கப்பட்டது