பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோச்செங்கட் சோழ நாயனுர் 17

மறுநாள் யானே வழிபட வந்து சிலந்தி வலையைக் கலைத்தபோது, சிலந்தி அதன் துதிக்கையுள் புகுந்து அழுந்தக் கடித்து விட்டது. அதல்ை யானே கீழே விழுந்து தன் துதிக்கையைத் தரையில் வேகமாக மோதியது. அதல்ை சிலந்தி இறக்க, யானையும் இறந்து விட்டது.

சிவபூசை செய்த புண்ணியத்தால் அந்தச் சிலந்தி சோழர் குலத்தில் ஒரு மகவாய்ப் பிறந்தது. சுபதேவன் என்னும் சோழ மன்னன் தன் மனைவியாகிய கமலவதி யுடன் தில்லை நடராசப் பெருமான் திருவடியை வணங்கி வாழ்ந்து வரும் நாளில் கமலவதி கருவுற்ருள். கருப்பம் கிரம்பி மகவு பிறக்கும் வேளேக்குச் சற்றுமுன் ஒரு சோதிடர், "இன்னும் ஒரு நாழிகை கழித்துக் குழங்தை பிறந்தால் எல்லா உலகமும் காவல்புரியும் சக்கரவர்த்தி யாவான்' என்று சொன்னர். அதைக் கேட்ட கமலவதி ஒரு நாழிகை யளவும் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன வழி யென்று ஆராய்ந்தாள்.

கடைசியில் தன் காலை மேலே எடுத்துக் கட்டும்படி சொன்னுள். ஒரு நாழிகைக்குப்பின் மீட்டும் பழைய படியே காற்கட்டை அவிழ்த்து விடச் செய்தாள். இவ்வாறு செய்தமையால் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறந்தது. அதிக நேரம் குழந்தை தாயின் வயிற்றில் இருந்தமையால் அதன் கண்கள் சிவந்திருந்தன. அதுகண்டு, "என் கோச் செங்கண்ணனே?' என்று மகிழ்ந்தாள். பின்பு அவள் உயிர் நீத்தாள்.

சுபதேவன் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான். குழந்தைக்குக் கோச் செங்களுன் என்பதே பெயராக வழங்கலாயிற்று. தக்கவண்ணம் அறிவுபெற்று வளர்ந்த சோழர் குல மைந்தன் சிவபிரானிடம் பேரன்புடையவகை விளங்கின்ை. அவன் தங்தை அவனுக்கு முடி குட்டித் தான் தவஞ் செய்யப் போனன்.

நா. க-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/23&oldid=585763" இலிருந்து மீள்விக்கப்பட்டது