பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாற்பெரும் புலவர்கள் "புலங்கந் தாக இரவலர் செலினே வரைபுரை களிற்றோடு நன்கலன் ஈயும் உரைசால் வண்புகழ்ப் பாரி.' -அகநானூறு என்று நல்விசைப் புலமை வாய்ந்த மெல்லியரான ஒளவையாரால் புகழ்ந்து பாடப் பெற்றவன் இப் பாரி. இவன், வில்லும் வேலும் கழலும் கண்ணி யும் தாரும் ஆரமும் தேரும் வாளும் உடைய குறு. நில மன்னவன்; பாண்டிய நாட்டிலுள்ள பறம்பு மலைக்குத் தலைவன், இவன் நாட்டையும் பொரு ளையும் படையையும் அதிகம் பெற்றிலனாயினும் இவனது வள்ளன்மை மூவேந்தர் வள்ளன்மை யினும் சிறந்து விளங்கியது. - இவன் ஒருநாள் தன்து பொற்றேர் ஊர்ந்து வேட்டைக்குப் புறப்பட்டான்; பல விலங்குகளை வேட்டையாடினன்; பின்னர், அரண்மனையை நோக்கித் திரும்பினன். அவ்வாறு இவன் வந்த போழ்து, தன் நாட்டு வளத்தைக் கண்டு மகிழ், பவன் போல இரு புறங்களிலும் ஊன்றிய பார்வை யோடிருந்தான்; அங்ங்னம் பார்த்துக் கொண்டு வருகையில் முல்லைக் கொடி ஒன்று படர்தற். கேற்ற கொழு கொம்பில்லாது வாடுவதைக் கண் டான்; உடனே வள்ளல் அம்முல்லையருகில் தன் தேரை நிறுத்தினான்; கீழிறங்கினான்; முல்லை. படுந்துன்பத்தைக் கண்டான்; அவனது மனம் மயக்கங் கொண்டது; கண்களில் நீர்த்துளிகள் துளித்தன. பிறர் துயரம் காணச் சகியா இல் வள்ளல் "அந்தோ! இக்கொடி படர்தற்கேற்ற