பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் - 33 கொம்பின்றி வாடுகின்றதே, யான் என்ன செய் வேன்! இங்குக் கொம்பொன்றும் இல்லையே. இதன் துன்பத்தைக் கண்டும் இதற்கொன்றும் செய்யாது யான் வறிதே எங்ங்ணம் செல்வென்? ஆ. நன்று, எனது பொற்றேரை இம்முல்லைக் கொடிக்கு ஆதரவாக வைத்து விட்டுச் செல்வேன்; இஃதே சரி” என்று கூறிக்கொண்டனன். உடனே இவன் தன் பொற்றேரை, சிறிதும் முன்பின் யோசியாது, காற்றால் அலைப்புண்ட முல்லைக் கொடிக்கருகில் வைத்தான்! ஆடிக் கொண்டிருந்த கொடி இனிதாய்ப் படருமாறு தன் தேர்மீது அதனை எடுத்து விடுத்த்ான். தேரை முல்லைக் கொடிக்கு நல்கியதால் அவன் அங்கிருந்து புறப்பட்டு, வெயிலால் மண்டை வெடிக்கவும், கால்கள் கொப்பளிக்கவும் நடந்து சென்று தன் அரண்மனையை அட்ைத் தான். பாரி செய்த இவ்வரிய செயல் பல புலவர் பெருமக்களால் பா ராட்டப்படுகின்ற்து. இத் தகைச் சிறந்த ஈகைக் குணமுடையவன் வேள்பாரி. கபிலரும் பாரியும் - பாரியின் பரந்த புகழைக் கபிலர் பெருமான் கேள்வியுற்றார்; அவனைக் காண விரும்பிப் பறம்பு நாட்டை அடைந்தார்; பாரியைக் கண் டார். பாரி புலவரை வரவேற்று உபசரித்தான். அன்று முதல் கபிலர் பாரியின் குணாதியங்களைக் கண்டு ஆனந்தமுற்று அவனைத் தன் உயிர்த் நா-3 . . . . . . -