பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாற்பெரும் புலவர்கள் வேளிருள் வைத்துப் போற்றற்குரியாய் வெற்றிப் போரையுடைய தலைவ! புலிகடி மாலே வானாற். கவிக்கப்பட்டுப் பெருங்கடல் சூழ்ந்த இப்பூவுல்கத், தின் கண் அணுகுதற்கரிய வலிமையுடைய பொன் னுண்டாகும் பெரிய மலைக்குத் தவை! வெற்றி வேலைத் தாங்கிய பகைவர் அஞ்சும் படைக்கும். கேடில்லாத நாட்டிற்கும் உரியவனே! என்னுடன் வந்துள்ள இம்மகளிர் யாரென்று வினவுவாயா யின், இவர்தாம், ஊர்கள் எல்லாவற்றையும் இரப் போர்க்கு வழங்கித் தேரை முல்லைக்கொடிக்கு வழங்கியவனும், தொலையாத நல்ல புகழையுடை யவனும், பறம்பிற்குத் தலைவனும் ஆன பார் வேள் பெண்கள். யான் இவர் தந்தையின் தோழன் ஆதலால், இம்மகளிர் என் மகளிர் ஆவர்; யான் இவரை நினக்குத் தர, நீ இவரைப் பெறுக என்று: இருங்கோவேளது புகழையும் பாரிவேளது புகழை யும் தான் மேற்கொண்டுள்ள வேலையையும் கூறி. அப்பெண்களை மணந்துகொள்ளுமாறு வேண் டினர். இருங்கோவேளும் இளவிச்சிக்கோவைப்போல மூவேந்தருக்கும் பயந்தவனாய், அம்மக்ளிரை மணக்க உடன்பட்டிலன். அவன் உடன்படா ததைக் கண்ட கபிலர் மனம் நொந்தார், அவர் மன வருத்தத்துடனே அவனை நோக்கி, "பெரு மானே! புலவர் மனம் வருந்துமாறு அரசர் நடந்து: கொள்ளல் ஆகாது. உன்னை ஒத்த அறிவினை யுடைய உனது குடியுள் ஒருவன் பெரும்புலவரான