பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாற்பெரும் புலவர்கள் குளத்தும் விளை நிலத்தும் பெய்யாது, களர் நிலத்தை நிறைத்தும், வரையாத மரபினையுடைய மழைபோல மதமிக்க யானையினுடைய கழல் புனைந்த காலையுடைய பேகன், கொடை யிடத்துத் தான் அறியாமைப்படுதலல்லது, பிறர் படை வந்து கலந்து பொரும்பொழுது அப் படை யிடத்துத் தான் அறியாமைப்படான்?" என்ற பொருளை அமைத்துக் கொழுவிய பா ஒன்றைப் பாடினர். அவ்வளவில் பேகன் பெருமகிழ்ச்சி யுற்று, பரணர்க்குப் பல வரிசைகள் தந்து, தேரும் ஈந்து அனுப்பினன். - அவர், பேகன் தந்த தேர் மீது வருங்கால் சுரத். திடைத் தங்கினர். அவ்விடத்தில் வேறு பாணர் பலர் தங்கி இருந்தனர். அவர்களுள் ஒருவன் பரணரைப் பார்த்து, "எவ் வள்ளலிடம் சென்று. மீள்கிறீர்?' என்று ஆவலுற்றுக் கேட்டனன். அவ்: வளவில் பரணர் அவனை அன்புடன் நோக்கி, "பாணன் சூடிய பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ, மாட்சிம்ைப்பட்ட அணியினை யுடைய விறலி அணிந்த பொன்னரி மாலை ஆகிய இவற்றுடனே விளங்கக்கூடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைவிட்டு இளைபபாறி ஊரின்கண் இருப்பவர்போலச் சுரத்திடை இருந்தீர்! நீர் யாவிர்? பாணரோ?' என எம்மைக் கேட்ட இர்வலனே! வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன்முன் யாம் நின் னினும் வறியேம்; இப்பொழுது அவ்வறுமை நீங்கி எந்நாளும் இத்