பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் 79 இவ்வாறு நக்கீரர் திறம்படப் பாடிய பாக்கள் பாண்டியனை மகிழச் செய்தன; அவன் நக்கீரரின் தலைமைப் பெருக்கையும் பரந்த சிந்தையையும் விரிந்த நோக்கத்தையும் நன்குணர்ந்தான்;. அக. மலர முகமலர்ந்தான்; தன்னோடு நக்கீரரை உடன் உண்ணச் செய்து, அவர் மனம் மகிழுமாறு பரிசில் பல நல்கினான். புலவர் அரசனது தளராக் கொடைத் திறத்தை வியந்து கொண்டாடி அவனைப் பலவாறு வாழ்த்தி விடைப்ெற்றுச் சென்றார். என்னே நக்கீரர் பெற்ற பெருமை: கள்வியலுக்கு உரை கண்டமை மதுரையிற் கோவலன் கொலையுண்டதும், பாண்டியன் நெடுங்செழியன் இறந்ததும், மதுரை எரியுண்டதும் ஆய இந்நிகழ்ச்சிகட்குப் பின்னர் இனஞ்செழியன் பட்டம் எய்தினன். அக்காலத்து வானமும் பொய்த்து வற்கடமும் மிக்கது. அதனால், தமிழ்ச் சங்கம் நடைபெறவில்லை. அரசன் புலவர்களைக் கூவியழைத்து, 'வாருங்கள்; நமது நாட்டில் பஞ்சம் அதிகரித்ததால், யான்' உங்களைக் காப்பாற்ற இயலாத நிலையில். உள்ளேன். நாடு வற்கடத்தாற் பெரிதும் அல்லலுறு கின்றது. ஆதலின் உங்களுக்குப் பிரியமான இடங் களுக்குச் சென்று பஞ்சம் நீங்கிய பின்னர் நாட்டைக" என்றான். . . . . . . . . . . . . புலவர்கள் அதற்கிசைந்து வேறு நாடுகளிற் புக்கனர், நாட்கள் கழிந்தன; மாதங்கள்.