பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


‘கொடுப்பது என்பது தன்னைக் கெடுப்பது’ என்று கருதுகிறான்; சேமிப்பு என்று சேர்த்து வைத்த நிதி இழந்து நிர்க்கதியாகிறான்; செல்வம் நிலைக்காது. இவன் ஒரு தேனீ; தேடியதை இழப்பான்.

தேனி என்ன செய்கிறது; உழைத்துச் சேகரிக்கும்; தானும் உண்ணாது; பிறரையும் அண்டவிடாது; காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் அடித்துச் சென்று விடுகிறான்; கட்டிக் காத்துப் பயன் இல்லை; அவன் வாழ்க்கை வெற்று வேட்டாகிறது; இப்படித்தான் பலர் தேன் ஈயாக வாழ்கிறார்கள்; ஏன் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.


2. இளமை நிலையாது
(இளமை நிலையாமை)

கறுப்பு நிறத்து அழகி; விருப்புற்று அவள் பின் அலைகிறான்; அவனுக்குச் சுருட்டைமயிர் மருட்ட அதனை வாரி முடிக்கிறான்; ‘அழகன்’ என்று தான் அவளிடம் சென்று குழைகிறான்; “அட அறிவிலி! இந்த முடி நரைக்கும்; வெளுக்கும்; மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இளமை உன் சொத்து; அதனைப் பத்திரப்படுத்து; பவித்திரமான செயல்களைச் செய்க; பாபம் பழி இவற்றை நாடி மருளாதே. இளமையிலேயே சுகங்களைத் துறக்கப் பழகு; அது உனக்கு மிகவும்