பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 123

பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட! தங்கருமம் முற்றுந் துணை. கருமையான மலைகளிலே இருந்தும் அருவிகள் பொங்கி

வழிந்து கொண்டிருக்கும் நீர்வளத்துடன் கூடிய மலைகளைக் கொண்ட, நல்ல நாட்டிற்கு உரியவனே! கட்டுக் கோப்பு இல்லாமற்போன பழைய கூரையினையுடைய வீட்டிலே, மழைக்காலத்திலே, உள்ளே பெருகிய மழை நீரினைச் சேற்றையே அணையாக இட்டுத் தடுத்து வெளியே இறைத்துவிட்டும், மேன்மேலும் விழுந்து கொண்டிருக்கும் நீரைத் தரையிலே விழவொட்டாமல் பற்பல ஏனங்களிலே ஏந்தியும், தம்முடைய காரியமானது முழுவதும் நிறைவேறும்வரை, அந்த வீட்டுக்காரனுக்குச் சிலர் துணையாயிருப்பார்கள்.

கட்டுக் கோப்பற்ற பழைய கூரைவீட்டை முதலிலேயே செப்பஞ்செய்து உதவாமல் தம் காரியம் முடியும் வரை, ஒழுக்குக் காலத்து உதவி செய்பவர், அவனுடைய துன்பத்தை நீக்கும் உளங்கலந்த நட்பினர் ஆகார். அது பற்றி அத்தகையோரின் நட்புப் பொருந்தா நட்பு என்பது கூறப்பட்டது.

232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்,

மாரிபோன் மாண்ட பயத்ததாம்;- மாரி வறந்தக்காற் போலுமே, வாலருவி நாட! சிறந்தக்காற் சீரிலார் நட்பு.

வெண்மையான அருவிகள் பலவற்றையுடைய நாட்டிற்கு உரியவனே! சீர்மையான பண்பு உடையவர்களுடைய நட்பானது, மேம்பாடுடைய சிறப்பினதாக மழை வளத்தைப் போல மாட்சிமைப்பட்ட பயனை உடையதாகும். ஆனால், நீர்மை இல்லாதவர்களுடைய நட்பு மிகுதியாகுமானால், அது மழை வறண்டுபோன கோடை காலத்தைப் போன்று பயனற்றதாகவும் துன்பம் தருவதாகவுமே விளங்கும்.

இதனால், சீர்மை இல்லாதவருடன் நட்புக் கொள்வது பொருந்தா நட்பு என்பது கூறப்பட்டது. சீர்மை - சிறந்த குணம்.

233. நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால்; - நுண்ணுல் உணர்விலர் ஆகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று.