பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 175

அதிகமாகி, ‘மருந்தினால் தணியாத பித்தங் கொண்டவன் இவன் என்று இகழ்ந்து நகையாடவே படுவான்.

மைத்துனக் கேண்மையினர் பரிகாசம் செய்பவராதலால், பரிகாசஞ் செய்பவர் பெருகுதலை, ‘மைத்துனர் பெருகி’ என்றார். ‘மூடன் தனக்குத்தானே பெருமை பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வான்’ என்பது கருத்து.

35. கீழ்மை

‘கீழ்மையாவது கீழமையான குணமுடைய மக்களது தன்மை. இத்தகைய குணம் உடையோர் எவ்வளவுதான் அறிவுறுத்தப்பட்டாலும், செல்வம், தகுதி முதலியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம் குணத்தைக் கைவிட மாட்டார்கள்.

இத்தகைய கீழ்மைக்குணம், ஒருவனை என்றும் நல்வழிகளிலே ஈடுபடவிடாமல் கீழான செயல்களிலேயே சதா செலுத்திக் கொண்டிருப்பதாகும். அறநெறிப்பட்டு ஒழுகித் தன் ஆன்மாவிற்கான உறுதிப் பயன்களைத் தேடுவதற்காகப் பெற்ற மனிதப் பிறப்பு, இந்தக் குணத்தினால் வெறும் பாழாகிக் கழியும்.

மேலும், இந்தக் குணத்தால், இவன் செய்யும் கீழ்த்தரமான செயல்களால் வரும் பழிபாவங்கள் இவனை அடுத்துப் பிறபிற பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். உட்பகைகளுள் ஒன்றான இதனைப் பற்றிக் கூறுவது இப் பகுதி.

341. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப் பெயினும்,

குப்பை கிளைப்போவாக் கோழிபோல், -மிக்க கனம் பொதிந்த நூல்விரித்துக் காட்டினும், கீழ் தன் மனம்புரிந்த வாறே மிகும்.

வளர்ப்பவன், தன் கடமையாகக், காலத்தால் தானியத்தைத் தன் வாயிலே போட்டான் என்றாலும் கூடத் தன் இயல்பினாலே குப்பையைக் கிளறுதலை விட்டொழியாத கோழியைப்போல, மிகுந்த மேன்மை நிறைந்திருக்கிற நூற்களின் பொருள்களை விளக்கி விளக்கித் தெரிவித்தாலும், கீழ்மைக் குணமுடையவன் தன் இயல்பினாலே தன் மனம் போனபடி யேதான் வரம்புகடந்து நடப்பான்.

“கீழ்மையாளனின் மனம் என்றும் கீழ்மையான வற்றிலேயே செல்லும் என்பது கருத்து.