பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நாலடியார்-தெளிவுரை

342. காழாய கொண்டு, கசடற்றார் தம்சாரல்,

தாழாது போவாம் என வுரைப்பின்-கீழ்தான், உறங்குவாம் என்றெழுந்து போமால், அஃதன்றி மறங்குமாம், மற்றொன் றுரைத்து.

‘உறுதியான நூற்பொருள்களைத் தமதாக்கிக் கொண்டு குற்றமற்றவராக விளங்கும் பெரியோர்களின் பக்கலிலே, நாம் காலந்தாழ்த்தாது போவோம்’ என்று சொன்னால், கீழ்மைக் குணம் உடையவன், ‘நாம் உறங்குவோம்’ என்று சொல்லி உறங்குவதற்கு எழுந்து போவான்; அஃதன்றியும் வேறொரு காரணத்தைச் சொல்லியும் வரமறுத்துச் செல்வான்.

‘கற்றவரிடம் போவதையே வெறுத்தும் மறுத்தும் ஒதுங்கிப் போவான் கீழ்மகன் என்பது கருத்து.

343. பெருநடை தாம்பெறினும், பெற்றி பிழையாது

ஒருநடையர் ஆகுவர், சான்றோர்; பெருநடை பெற்றக் கடைத்தும், பிறங்கருவி நன்னாட! வற்றாம் ஒருநடை, கீழ்.

விளங்குகின்ற மலையருவிகளுடைய நல்ல நாட்டை உடையவனே! சான்றோர்கள் பெரிய சிறப்பினையே தாம் பெற்ற காலத்தினும், தம்முடைய தன்மையினின்றும் எள்ளளவும் மாறுபடாமல், எப்பொழுதும் ஒரே நடத்தையுடையவர்கள் ஆவார்கள். கீழ்மகனோ பெரிய சிறப்பினைத் தன் ஊழ்வினை வசத்தினால் பெற்ற காலத்திலும் தன் முந்திய நடத்தைக்கு மாறுபட்ட ஒரு நடத்தையிலேயே வல்லவனாகத் திகழ்வான்.

‘எவ்வளவு மேன்மை வந்தாலும் சான்றோர் தம் சிறந்த பண்புகளின்றும் மாறாதவர்களாயிருப்பர். கீழ் மக்களோ, பெருமை பெற்ற காலத்துச் செருக்கிக் குணம் வேறுபடுவர்

என்பது கருத்து.

344. தினையனைத்தே ஆயினும் செய்தநன்று உண்டால்,

பனையனைத்தா உள்ளுவர், சான்றோர்;-பனையனைத்து என்றுஞ் செயினும், இலங்கருவி நன்னாட, நன்றில் நன்றறியார் மாட்டு

விளங்குகின்ற மலையருவிகளையுடைய நல்ல நாட்டை உடையவனே! ஒருவன் செய்த உதவியை, அது தினைத் தானியத்தின் அளவிற்குச் சிறியதேயானாலும், சான்றோர்கள், பனையளவு பெரிதாகக் கருதுவார்கள். என்றும் பனையளவான