பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - நாலடியார்-தெளிவுரை

நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்றான்’ எனப்படுத லான்!

இப்பொழுதுதான் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்;

அப்புறம் உட்கார்ந்தான்; அப்புறம் படுத்தான்; அப்புறம் தன் உறவின் முறையார்கள் அலறித் துடிதுடிக்க இறந்து போய்விட்டான்! இப்படி உடலின் நிலையாமை பற்றிச் சொல்லப்படுவதனால், ‘புல்லின் நுனியின் மேலாக இருக்கும் நீர்த்துளியைப் போன்று யாக்கையும் நிலையாமை உடையது’ என்று எண்ணி, இப்பொழுதே அறச்செயல்களைச் செய்வதிலே ஈடுபடுங்கள்.

“நின்றுகொண்டிருந்த ஒருவனே சற்று நேரத்தில் தளர்ந்து சோர்ந்து செத்துப்போகவும் காணுகின்றோம். இத்தகைய நிலையாமையினை உடையது உடல். இதனை உணர்ந்து இப்பொழுதே அறவினைகளைச் செய்யத் தொடங்குக!” என்பது கருத்து. இன்னினியே - இப்பொழுதே

30. கேளாதே வந்து, கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புட்போல, யாக்கை தமர்க்கொழிய நீத்து.

மாந்தர்கள், ‘யாம் வரட்டுமோ? என்று கேளாமலேயே வந்து, உறவினர்களாக ஒரு வீட்டிலே பிறப்பார்கள். பின் ‘போகிறோம் என்று சொல்லாமலேயே தனக்கு இருப்பிட மாயிருந்த மரமானது தனித்துக் கிடக்கத் தொலை தூரத்திற்குப் பறந்து போகின்றதோர் பறவையைப் போலத், தம் உறவினர் களுக்குத் தம் உடம்பை உயிரின்றித் தனித்து விட்டுவிட்டுத் தாமும் போய்விடுவார்கள்.

“பறவைகள் மரத்தைக் கைவிட்டு அதனைப்பற்றி ஏதும் நிலையாதே போய்விடும் என்பதை உணர்ந்து, அந்த உடலாற் செய்யத்தகும் நல்ல செயல்களிலே ஈடுபடவேண்டும் என்பது கருத்து. சேக்கை - இருப்பிடம்.

4. அறன் வலியுறுத்தல்

செல்வம், இளமை, யாக்கை என்பவை நிலையில்லாதன என்பதுபற்றிய செய்திகள் இதுவரை கூறப்பட்டன. இவை போலன்றி, என்றும் நிலையான புகழும் உயிருக்கு உறுதியும் தருவதான அறத்தின் தன்மையை உணர்ந்து, அதனை