பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 27

மரமாகி விளங்குவது போன்றது தருமத்தின் பயனும். அந்த அறப்பயன் தன் செயல் அளவிலே அது செய்யப்பட்டுச் சேர்ந்த காலத்து, வானகமும் சிறியதாகுமாறு எங்கும் கவிந்து, செய்தவனுக்கு மிகுந்த சிறப்பைத் தருவதாகும்.

‘தருமம் செய்வதையும் தகுதியுடையவர்களுக்கே செய்தால் பெரும்பயன் விளையும் என்பது கருத்து. உறக்கும் துணையது-கிள்ளி எடுக்கின்ற அளவிற்குச் சிறியது. இறப்பமிகுதியாக போர்த்து-கவிந்து பரந்து. -

39. வைகலும் வைகல் வரக்கண்டும், அஃதுணரார்,

வைகலும், வைகலை வைகுமென்று இன்புறுவர்; வைகலும் வைகற்றம் வாழ்நாள் மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.

நாள்தோறும் கடந்து போகும் நாட்கழிவைத், தம் வாழ்நாளின்மேல் செல்லுதலாக வைத்து, அந்த நாட் கழிவினைப் பற்றிய உண்மையை அறியாதவர்கள், நாள்தோறும் நாட்கழிவானது தவறாது வந்துகொண்டிருக்கக் கண்டும், அதன் உண்மையான இயல்பினை உணர மாட்டார்கள். நாள்தோறும் ஆயுள் கழிந்து போதலை இருக்கிறதென்று தம் அறியாமையால் நினைந்து, அவர்கள் எல்லாரும் அற்ப மகிழ்ச்சியினையே அடைவார்கள்.

‘நாள் கழிவதுடன் தம் ஆயுளும் கழிந்துகொண்டு போவதை உணர்ந்து, அறநெறியிலே ஈடுபட்டு மறுமைப் பயனுக்கு வழிகோல வேண்டும் என்பது இது.

40. மான அருங்கலம் நீக்கி, இரவென்னும்

ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின் ‘ஈனத்தனமான காரியங்களைச் செய்து இந்த உடலைப் போற்றிவந்த போதிலும், இந்த உடலானது, தன்பால் உறுதிசேரப் பெற்றதாகி, நீடித்த காலம் நிலைத்து நிற்பதென்று சொல்ல முடியாது. அப்படி நிலைத்திருக்குமானால், மானம் என்று சொல்லப்படும் அருமையான அணிகலனை ஒதுக்கி விட்டு, இரப்பது என்று சொல்லுகின்ற தாழ்மையான மானக் கேட்டுக்கு உட்பட்டும், பெரும்பாலும் யானும் வாழ்வேன்.