பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - நாலடியார்-தெளிவுரை

இளமையாகிய சிறந்த பருவமும் வீணே கழிந்து விட்டது. இப்பொழுதே நோய்நொடியொடு கிழத்தனமும் வந்து நம்மைச் சேர்ந்து விடும். ஆதலால், துணிவினைப் பொருந்தி, என்னொடும் ஆராயாமல் எழுகின்ற நெஞ்சமே! நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு இப்போதாவது முயற்சி செய்யப்போகின்றாயோ, அல்லவோ?

‘உள்ளத்தின் வழியாகவே உயிரும் இன்ப துன்பங்களை எல்லாம் அநுபவிக்கும். இளமையிலே, அதன் வழியே நின்று உலக இன்பங்களிலே உழன்ற ஒருவன், நன்னெறியை நாடியவனாக, முதலிலே தன் மனத்தைத் தன் வழிப்படுத்த இப்படிச் சொல்லுகிறான்’ என்று கொள்க. கொன்னே-வீணே. சூழ்தல்-ஆராய்தல்; கலந்து பேசுதல். நமக்கு-உயிராகிய தன்னையும் மனமாகிய நெஞ்சையும் சேர்த்துக் கூறியது.

56. மாண்ட குணத்தோடு மக்கட்பேறு இல்லெனினும்,

பூண்டான் கழித்தற்கு அருமையால்-பூண்ட மிடியென்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடி யென்றார், கற்றறிந் தார். ‘மனைக்கு மாட்சிமைப்பட்டதான குணங்களுடன், தன் குலவளர்ச்சிக்கான பிள்ளைப்பேறும் இல்லாமற் போனாலும், ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டவன், அவளை விட்டு நீங்குவது என்பது முடியாததாகும். அதனாலும், தான் மேற்கொண்ட வறுமையால் நேரும் வருத்தம் என்னும் காரணத்தாலும், மேலான முறைமையாகிய துறவொழுக்கத்திலே நிலைபெற்று நின்று, அந்த இல்வாழ்வையே விட்டுவிடுவாயாக’ என்பார்கள், நல்ல நூற்களைக் கற்று, உண்மையறிவை அறிந்த சான்றோர்கள்.

‘திருமணம் செய்துகொண்ட பின், எந்தக் காரணத்தாலும் அந்தப் பிணிப்பை விடுவது அருமையாதலால், அதற்கு முன்பே துறவு மேற்கொள்க’ என்பது கருத்து. மிடி.துன்பம். மேன் முறை - மேன்மையான முறையாகிய துறவு நெறி. கடி-கடிந்து ஒதுக்குக.

57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால், நீக்கி, நிறுஉம் உரவோரே, நல்லொழுக்கம் காக்குந் திருவத் தவர். தாம், முயற்சி எடுத்து மேற்கொண்ட நோன்புகள் எல்லாம் முழுவதும் அறவே கெட்டுப் போகும்படியாகத் தாங்குவதற்கு