பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 57

பலரும் தம்மை விரும்பிவந்து சேருமாறு கொடுத்துண்டு வாழ்பவர்கள், ஊர்நடுவிலே திண்ணையினால் நாற்புறமும் சூழ்ந்து கொள்ளுதலை உடைய, காய்த்தல் பொருந்திய பெண்பனை மரங்களைப் போன்றவர்கள் தம்முடைய குடித்தனமானது வளமுடையதாக இருக்கின்ற காலத்தினும் பிறருக்குக் கொடுத்து உண்ணாத அறிவற்ற மனிதர்கள், சுடுகாட்டிலே இருக்கும் வளமான ஆண்பனைக்குச் ΗΕLΟΠΤώδΤΙΟΠΤΟΥΙΓΤΠΤΦ56ΥΤ.

‘சுடுகாடு நினைத்தபோது செல்வதற்கு அச்சந்தரும் அசுத்தமான இடம்; அதனையும் மீறிச் சென்றாலும் நிற்பது பயனற்ற ஆண்பனை; அப்படிப்பட்டவரே இருந்தும் ஈயாத உலோபிகள் என்பது கருத்து.

97. பெயற்பான் மழைபெய்யாக் கண்ணும், உலகஞ் செயற்பால செய்யா விடினும்,-கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யும் ஆறு?

கயல்மீன்களின் புலால் நாற்றத்தைப் புன்னையின் நறுமலர்கள் போக்குகின்ற, அலைமோதுகின்ற கடலினது குளிர்ச்சியான கரையினையுடைய நாட்டின் தலைவனே! பெய்யும்படியான காலத்திலே மழையானது பெய்யாமற் பொய்ப்பட்டுப் போனவிடத்தும், உயர்ந்தோர் செய்யத்தக்க நல்ல செயல்களைச் செய்யாமற்போன காலத்தும், இந்த உலகமானது பிழைக்கின்றதற்கான வகைதான் என்னவோ?

‘அதனால், அம் மழை போலும்; உயர்ந்தோர் போலும் கைம்மாறு கருதாது அனைவரும் மனமுவந்து உதவுதல் வேண்டும் என்பது கருத்து.

98. ஏற்றகைம், மாற்றாமை, என்னானும் தாம்வரையாது ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன்;-ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாlவார்க்கு ஈதல் பொலிகடன் என்னும் பெயர்த்து.

வளங்களால் மிகுந்த கடற்கரையினை உடைய தலைவனே இரந்து வந்து ஏந்தின கையை, இல்லையென்று மறுக்காமல், உள்ளது எதையானாலும் இன்னான் இனியானென்று ஒரு வரையரையும் கருதாமல், பிரதி உபகாரஞ் செய்யமாட்டாத வறுமையாளார்களுக்குக் கொடுப்பதே சிறந்த ஆண்மக்களுடைய கடமையாகும். அப்படிக் கொடுப்ப