பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 . நாலடியார்-தெளிவுரை

12. மெய்ம்மை

மெய்ம்மையாவது ஒவ்வொரு பொருளின் இயற்கையான உண்மைத் தன்மை ஆகும். அதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமையாகும். மயக்க உணர்வின் காரணமாகப் பொருள்களின் தன்மைகளைப் பிறழ உணர்ந்தால், அதனால் விளையும் தீமைகளும் பலவாயிருக்கும்.

மனிதன், பலவகைப் பொருள்களின் தொடர்புடன் வாழவேண்டியவன். அவற்றின் உண்மையான இயல்புகளை அவன் அறிந்து அவற்றைப் பயன்படுத்த வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும். அதனால், இது இல்லறவியலின்கண் அமைக்கப்பட்டது.

இப்படிப் பொருள்களின் தன்மைகளை உள்ளவாறு உணர்ந்து தெளியும் ஆற்றல் ஒருவனுக்கு ஊழ்வினைப் பயனின்றி அமையாததனால், ஊழ்வினைபற்றிக் கூறிய பழவினை என்னும் அதிகாரத்திற்குப் பின்னர், இது வைக்கப்பட்டது என்று கொள்ளுக.

111. இசையா ஒருபொருள் இல்லென்றால் யார்க்கும்

வசையன்று, வையத்து இயற்கை;-நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல், நிரைதொடீஇ செய்ந்நன்றி கொன்றாரிற் குற்றம் உடைந்து.

வரிசையாகப் பல வளையல்களை அணிந்துள்ளவளே! தம்மால் கொடுப்பதற்கு இயலாத ஒரு பொருளைத் தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு இல்லையென்று சொல்லுதல் எவருக்கும் குற்றமாகாது. அதுவே உலகத்தாரின் இயற்கையுமாகும். ஆனால், கொடுப்பவனைப் போல நடித்து, வந்து இரந்தவர்களுடைய ஆசையானது கெடும்படியாக நெடுங்காலம் கழியச் செய்தபின், ஏதுங்கொடாமற் பொய்த்தல் இருக்கிறதே, அது மிகவும் கொடுமையாகும். அது, ஒருவன் செய்த உபகாரத்தை மறந்தவர்களைக் காட்டினும் பெரிதும் குற்றம்

உடையதுமாகும்.

‘இல்லையென்று சொல்லுதல் உண்மை நிலைமையை உரைத்தால் தவறன்று; ஆனால், இருக்கும்போதுங் கொடுப்பது போலக் காட்டிக் கடைசியில் இல்லை யென்பது மிகவும் தவறாகும் என்பது கருத்து. நசை-விருப்பம்.