பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

எப்பொழுதும் ஒட்டி உறவாடுவர். நண்பர் உறவினர் நமக்குத் தேவையே எனினும் உறவுக்கு உள்ள உறுதி நட்புக்கு இருக்க வாய்ப்பு இல்லை,

நம்மை அண்டவரும் மண்டை ஓடுகள் அவர்கள் யாராக இருந்தால் என்ன? அவர்கள் தம் தலையெழுத்தை எடுத்துச் சொல்லி விலை மதிப்பு இல்லா உறவு பாராட்டி வந்தால், “நீயார்? எப்படி எனக்கு உறவு? உனக்கு நன்மை செய்தால் எனக்கு என்ன மேன்மை?” என்று கேள்வி கேட்டு விருந்தாகிய வேள்வி செய்யாமல் இருப்பவர் கீழ்மக்கள் ஆவுர். தராதரம் பாராமல் பராவரும் பண்பினர் யாவராயினும் அவர்களைச் சுற்றமாகக் கொள்பவரே ஏற்றம் மிகு மேன்மக்கள் ஆவர்.

பொன்தட்டில் புலி நகம் போன்ற புழுங்கல் சோறு, கறிகாய், வடை வகை இவற்றை அயலான் அழைக்க அருவிருந்து என அவற்றை வாரிக் கொட்டிக் கொள்வதை விட நம் வீட்டில் இருந்து கொண்டு நம் உழைப்பில் ஈட்டிய பொருளைக் கொண்டு உப்பு இல்லாத வெறுஞ் சோறு ஆயினும் நம் சுற்றத்தவரோடு அமர்ந்து உண்பதே எக்காலத்தும் இனியது ஆகும். அதற்கு இணையான இன்பம் எதுவுமே இவ் உலகில் இல்லை.

அவசரம், ஆவேசம், பசி, இவற்றோடு சுவைமிக்க உணவு; நடுப்பகலுக்கு முன்பே சுடச் சுடப் படைத்து உண்ண அழைக்கின்றார்; ஆனால் அவர்கள் முன்பின் பழ காத அறியாத புதியவர்கள்; அயலார். “அய்யா! கொஞ்சம் பொறு! நேரம் ஆனாலும் ஆகட்டும்; சாயுங்காலம் வரை காத்திருக்க வேண்டுமா? பொறுத்திரு; அது ஆறிய கஞ்சி