பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

3. காயமே இது பொய்யடா

(யாக்கை நிலையாமை)

சாவுக்குப் பேதம் இல்லை; மூத்தவன், இளையவன், அரசன், ஆண்டி என்று பிரித்துப் பார்ப்பது இல்லை; கியூவில் சின்னவர் பெரியவர் எல்லாரும் நிற்கின்றனர்: குடைபிடித்துக்குவலயம் ஆண்ட மாநில மன்னர் எல்லாரும் அடைமழைக் காலத்திலும் அடையும் இடம் சுடுகாடு தான்; அங்கேயும் அவர்கள் சுகவாசிதான்; “ஏ.சி. இல்லை” என்று சொல்வதே இல்லை ; அவர்களே குளிர்ந்து விட்டனர். பி.சி. யில் வாழ்ந்தவர் பலர்.

பத்திரிகைச் செய்தி தேதி முத்திரை பெற்று வெளிவருகிறது. ”மணமகன் பிணமகனானான்; நேற்று அடித்தது மணமுழவு, இன்று அடிப்பது பிண இழவு; எதிர்பார்க்க வில்லை; கழுத்தில் கயிறு ஏறவில்லை; அதற்குள் இந்த அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது; செத்தவன் செத்தவன்தான். அவன் மனைவிபொட்டு கால் துட்டுதான்; அதனை அவள் அழிக்கவில்லை. எது எப்பொழுது நடக்கும் என்று முன் கூட்டி உரைக்க இயலாது.

மரணம் என்பது ஒன்று உண்டு; இதனை மறந்தே போகின்றனர் ; அறிவிப்பு மணி தேவையாகிறது. செத்தவரை நாளை சாகின்றவர் சுமந்து செல்கின்றனர். நேற்று இருந்தவன்; காற்று வாங்கச் சென்றவன் இன்று காற்றோடு கலந்துவிட்டான். ‘யார் காயம் யாருக்கு நிச்சயம்?’ என்று தத்துவம் பேசுகின்றான். இவனைப் பற்றியும் மற்றவர் இப்படித்தான் பேசப் போகிறார்கள். பறை அடிப்பவன் வந்து சேர்கிறான்; வந்ததும்