பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

செத்தவனை எடுத்துப் பாடையில் வைக்கும் போது, அடிக்கிறான் ஒருமுறை; தூக்கிச் செல்லும்போது அடிக்கிறான் மறுமுறை; இறக்கி வைக்கும்போது ஒரு முறை. இப்படி மூன்றுமுறை ஏலம்போட்டு இந்தச்சவக் கோலத்தை அறிவிக்கிறான்; என்றாலும், இந்த ஈனஜென்மங்களுக்கு எங்கே ஏறப் போகிறது; வாழ்வில் நேசம் வைக்கிறான்; பாசம் காட்டுகிறான்; கோடி ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்களை விளைவிக்கிறார்கள்.

செத்த பிறகு இந்தப் பித்த மனிதன் சத்தமே செய்வது இல்லை; அவனைப் பற்றிப் பிறர் என்ன பிதற்றுகிறார்கள்? “நார் தொடுத்துக் கட்டுக” என்று அறிவிக்கின்றனர்; “நீர் மொடுத்துக் கொட்டுக” என்று பேசுகின்றனர்; “நன்கு ஆய்ந்து அடக்குக” என்று கூறி அடக்கம் செய்கின்றனர்; அவன்தான் செத்துவிட்டானே; அவனைப் பற்றி ஏன் பழித்துப் பேசுகிறாய்; அவன் செவிகள் மறுத்து விட்டன; எந்தக் கவிகளும் கேட்க அவனுக்கு இயலாது. இப்பொழுது அவன் வெறும்தோற்பை; அதனுள் இருந்த கூத்தன் ஆடி வெளியேறிவிட்டான்; நாடி அடங்கி விட்டது; நாளும் முடிந்துவிட்டது

“செத்தவன் என்ன ஆனான்? வாழ்வு என்பது இவ்வளவுதானா? இல்லை; அடுத்த பிறவி அவனுக்காகக் காத்துக்கிடக்கிறது! நல்லது செய்தால் உயர் பிறவி; அல்லது செய்தால் இழி பிறவி; ஆத்மாவுக்கு அழிவே இல்லை; இந்த உடம்புதான் அழிகிறது; உயிர் அழிவது இல்லை” இப்படித் தத்துவம் பேசித் தருக்கம் செய்கின்றனர்.

சுருக்கமாய்ச் சொல்வதாயின் வாழ்க்கை மழைநீர் மொக்குள்; ‘இதுதான்; மழைநீரில் ஒருமுகிழ்ப்புத் தோன்று