பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


சுற்றத்தவர் கடிதம் போட்டுவிட்டா வருகிறார்கள்? கேட்டுவிட்டா வருகிறார்கள்? அவர்கள் வருவதும் தெரிவது இல்லை; போவதும் தெரிவதில்லை. வந்தபோது கல கலப்பு; செல்லும் போது சலசலப்பு; அங்கு உள்ளபோது மிதமிதப்பு; சென்றபோது பரிதவிப்பு. கேளாதே வந்து சொல்லாதே செல்லும் சுற்றம்; அதுதான் நம் வாழ்வு; யாரைக் கேட்டும் பிறப்பது இல்லை; யார் சொல்லியும் இறப்பது இல்லை. வந்தோம் போனோம்; வந்தவழி பார்த்துக் கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

4. நல்லன செய்க

(அறன் வலியுறுத்தல்)

”அடுத்த வீட்டு அம்புஜைத்தைப் கார்த்தீர்களா ?” என்று அங்கலாய்க்கிறாள் இந்த வீட்டுப் பங்கஜம்; அதற்கு அவள் அகமுடையான் சொல்கிறான். “அவள் வீட்டுக் காரர் இரவும் பகலும் உழைக்கிறார்; அதனால் தழைக்கிறார்; பொறாமைப்படாது நாமும் உழைப்போம்; உயர்வோம்” என்று உறுதி கூறுகிறான். அறமே ஆக்கம் தரும்;

“உழைப்பவர் எப்படியும் முன்னுக்கு வருவர்; இது நியதி; இன்று பெருமையுடன் வாழ்பவர் எல்லாரும் ஒருமையுடன் உழைத்து உயர்ந்தவர் தான். அதனை அறிதல் நலம்” என்கிறான். அதனைக் கண்டு அழுக்காறு கொள்வதில் விழுக்காடு இல்லை; உழைக்காமல் யாரும் முன்னுக்கு வருதல் இல்லை.

நல்ல தொழில்; அவர் வீடு மிக்க எழில்; அவர் சுற்றித்திரிவது பொழில்; பொழுது கழிவது நறுநிழல்; அவர்மட்டும் உண்டு தின்று மகிழ்கின்றார்; மற்றவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. என்றைக்குத்தான்